Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சியில் தீப்பிடித்த அலுவலகம் சீரமைப்பு

Print PDF
தினமலர் 21.04.2010

மாநகராட்சியில் தீப்பிடித்த அலுவலகம் சீரமைப்பு

ஈரோடு: தீப்பிடித்த மாநகராட்சி அலுவலகத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கு பின், 'எக்ஸாஸ்டர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சென்ற 14ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. வரி செலுத்தும் அலுவலகத்தில் நடந்த இந்த தீவிபத்தில், 32 மின்விசிறிகள், தெர்மகோல் ஷீட்டால் வேயப்பட்ட மேற்கூரை (சீலிங்), ஒரு டேபிள், இரண்டு சேர், சில ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

அறைமுழுவதும் புகையடித்ததில் கறுப்பு நிறத்தில் மாறியது. எம்.சி.பி., போர்டு சரியான நேரத்தில் துண்டித்ததால், அருகிலிருந்த வாக்காளர் பட்டியல் அலுவலகத்துக்கு மின்சாரம் செல்லவில்லை. இதனால், பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. சித்திரை முதல் நாள் நடந்த தீவிபத்தை அபசகுணமாக மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் கருதுகின்றனர். தீ விபத்துக்கு பின் மாநகராட்சி வரி செலுத்தும் அலுவலகம் சீரமைக்கும் பணி நடப்பதால் சரி வர செயல்படுவதில்லை. மேல் தளத்திலும், கீழ் தளத்திலும் ஆவணங்கள், கோப்புகள், இருக்கைகள், கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி அலுவலகத்தில் சீரமைக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தெர்மகோல் ஷீட்டால் வேயப்பட்ட மேற்கூரை பிரிக்கப்பட்டு, டிஸ்டம்பர் அடித்து வருகின்றனர். தீ விபத்தின் போது, போதிய காற்றோட்ட வசதி (வெண்டிலேஷன்) இல்லாததால்தான் புகை வெளியே செல்ல முடியாமல் கம்ப்யூட்டர், டேபிள், சேர், சுவர் முழுவதும் புகை பரவி கறுப்படித்தது. போதிய காற்றோட்ட வசதியிருந்திருந்தால் புகை உள்ளே பரவியிருக்காது. தீ விபத்துக்கு பின் மாநகராட்சி அலுவலகத்தில் 'எக்ஸாஸ்டர்' பொருத்துவதற்காக சுவரில் ஐந்து இடங்களில் துளை போட்டுள்ளனர். கட்டிடம் கட்டும்போதே திட்டமிடாதது ஏனோ?

Last Updated on Wednesday, 21 April 2010 06:14
 

வைத்தியநாதன் மேம்பாலம் ரூ. 2 கோடியில் புதுப்பிப்பு: மேயர்

Print PDF

தினமணி 20.04.2010

வைத்தியநாதன் மேம்பாலம் ரூ. 2 கோடியில் புதுப்பிப்பு: மேயர்

சென்னை, ஏப். 19: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வைத்தியநாதன் மேம்பாலம் ரூ. 2 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மாநகராட்சி மின்துறை சார்பில், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள 575 புதிய, தெரு மின்விளக்குகள் இயக்கி வைக்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மின் விளக்குகளை இயக்கி வைத்த மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:

வைத்தியநாதன் மேம்பாலம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் ரூ. 98.10 லட்சம் செலவில் 575 தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ. 1.50 கோடி செலவில் புதிதாக 1000 தெரு மின் விளக்குகள் அமைக்கப்படும். இதுபோல் 50 கி.மீ. நீளத்துக்கு ரூ. 1.75 கோடி செலவில் புதிய மின்வடங்களும் அமைக்கப்பட உள்ளன.
30
ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த வைத்தியநாதன் மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பாலம் பாதிப்படைந்துள்ளது. எனவே,ரூ. 2 கோடி செலவில் மேம்பாலம் பலப்படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

Last Updated on Tuesday, 20 April 2010 09:57
 

விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: மாநகராட்சிக்கு ரூ.35 கோடி ஒதுக்க வேண்டும்

Print PDF

தினமணி 17.04.2010

விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: மாநகராட்சிக்கு ரூ.35 கோடி ஒதுக்க வேண்டும்

மதுரை, ஏப். 16: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விஷயத்தில் மாநகராட்சிக்கு ரூ.35 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இச்சங்கத்தின் கௌரவச் செயலர் பி.சுபாஷ்சந்திரபோஸ் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

மதுரை விமான நிலையத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது பாரட்டுக்குரியது. முதற்கட்டமாக ரூ.130 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. விமான ஓடுதளப் பாதையை 12,500 அடியாக விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கான நில ஆர்ஜிதம் மற்றும் ஒப்படைப்பு பணிகள் மட்டும் இன்னும் முழுமையடையாமல் உள்ளன.

விமான நிலைய விரிவாக்கத்துக்கான பகுதியில் மதுரை ரிங்ரோடு குறுக்கிடுவதால், அதை ஆறரை கிலோமீட்டர் தொலைவுக்கு மாற்றி அமைப்பதற்கான வல்லுநர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன.

ரிங் ரோடு பகுதியில் ஆறரை கிலோமீட்டர் தூரம் மாற்றியமைப்பதற்கான உத்தேச மதிப்பீட்டுத் தொகையான ரூ.35 கோடியை உடனடியாக மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்து விமான நிலைய விரிவாக்கப் பணிகள் காலதாமதமின்றி நிறைவேற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிய டெர்மினல் பணிகள் முடிவடைந்தவுடன், கலால் மற்றும் குடியேற்றப் பிரிவு அலுவலகங்கள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா, துபாய், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மதுரையிலிருந்து விமானங்கள் இயக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதுரை} புதுதில்லி நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் தென்னிந்தியாவின் தொழில் வளம் சிறப்படைவதற்கும், சுற்றுலாத் துறை மேன்மையடையவும் வழிவகுக்கும்.

Last Updated on Saturday, 17 April 2010 09:25
 


Page 183 of 238