Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர்

Print PDF

தினமணி 01.04.2010

பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர்

பரமக்குடி, மார்ச் 31: பரமக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.4 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டுள்ளது. இதை நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி புதன்கிழமை இயக்கி துவக்கிவைத்தார்.

நகராட்சி அலுவலகப் பணிகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்டுள்ளதால் நகரில் மின்தடை ஏற்படும்போது பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவந்தன. இதனால் பொதுமக்களின் நலன் கருதியும், பணிகள் அனைத்தும் தடையின்றி தொடர்ந்து நடை பெறும்விதமாகவும் மின்தடைக்கு மாற்று ஏற்பாடாக ரூ. 4 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர் வாங்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டு, புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் ரத்தினக்குமார் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 01 April 2010 09:40
 

ரூ.3.92 லட்சத்தில் வந்தாச்சு உபகரணங்கள் : ஆரணி நகரில் இனி தேங்காது 'குப்பைகள்'

Print PDF

தினமலர் 01.04.2010

ரூ.3.92 லட்சத்தில் வந்தாச்சு உபகரணங்கள் : ஆரணி நகரில் இனி தேங்காது 'குப்பைகள்'

ஆரணி : ஆரணி நகராட்சிக்கு மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குப்பைக் கூடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 11 வரையிலான வார்டுகளின் துப்புரவு பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 22 வார்டுகளில் நகராட்சியினரே துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், துப்புரவு பணிகளை மேற்கொள் வதற்கு சரியானபடி உபகரணங்கள் இல்லாததால், நகரின் பல இடங்களில் துப்புரவு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு, நகராட்சி பொது நிதியில் இருந்து ஒரு வார்டுக்கு 11 ஆயிரத்து 900 ரூபாய் வீதம் 33 வார்டுகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பீட்டில் குப்பை சேகரிக்கும் கூடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டன. இவற்றை நகராட்சி வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், எம்.எல்.., சிவானந்தம் கலந்துகொண்டு, வார்டுக்கு ஒரு தள்ளுவண்டி மற்றும் 4 குப்பை கூடைகள் வீதம் நகராட்சி தலைமை துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சசிகலா, நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:54
 

தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை குடிநீர் பிரச்னையை சமாளிக்க புதியதாக 2 ஜெனரேட்டர்

Print PDF

தினமலர் 01.04.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை குடிநீர் பிரச்னையை சமாளிக்க புதியதாக 2 ஜெனரேட்டர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கோடையில் குடிநீர் பிரச்னை வராமல் சமாளிப்பதற்காக புதியதாக இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்படுகிறது. தூத்துக்குடியில் கோடை வெயிலின் உக்கிரம் இப்போதே மிக அதிகமாக இருந்து வருகிறது. வெயில் காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக குடிநீர் செலவாகும். ஆனால் கோடை காலத்தில் குடிநீர் வரத்தும் குறையும். இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை காலத்திலும் எப்போதும் போல் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மின் தடை காரணமாக குடிநீர் சப்ளையில் ஏற்படும் பிரச்னையை தவிர்க்கும் வகையில் மாநகராட்சிக்கு கூடுதலாக 2 ஜெனரேட்டர் வாங்கப்படுகிறது.தூத்துக்குடி ராஜாஜி பூங்கா குடிநீர் தொட்டியில் தற்போது 250 கே.வி ஜெனரேட்டர் இருக்கிறது. இங்கு 320 கே.வி ஜெனரேட்டர் வாங்கி அங்கு வைக்கப்படுகிறது. அடிஷனலாக 250 கே.வி ஜெனரேட்டர் அங்கு இருக்கும் வகையில் செய்யப்படுகிறது.

இதுவரை ஜெனரேட்டர் இல்லாமல் இருக்கும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஜி.எல். ஆர் குடிநீர் தொட்டிக்கு புதியதாக 75 கே.வி ஜெனரேட்டர் வாங்கப்படுகிறது. இந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் உடனடியாக வாங்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆற்றில் குடிநீர் வரத்து குறைந்து வருவதால் எப்போதும் போல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு எடுக்கும் குடிநீர் அளவை அப்படியே எடுக்கும் வகையில் மாநகராட்சி வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் வரத்தினை மேம்படுத்தும் வகையில் சில பணிகள் மேற்கொள்ளும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளும் பணி துவங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 10 குடிநீர் உறிஞ்சு கிணறுகளை சுற்றி தண்ணீர் வரத்தை அதிகமாக்கும் வகையில் ஜே.சி.பி மூலம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி முடிந்தால் எப்போதும் போல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு எடு க்க கூடிய குடிநீரை எடுத்துவிடலாம். இதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Thursday, 01 April 2010 06:41
 


Page 189 of 238