Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு ரூ.5.5 லட்சம் செலவில் கார்

Print PDF

தினமலர் 01.04.2010

ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு ரூ.5.5 லட்சம் செலவில் கார்

சின்னமனூர் : ஹைவேவிஸிற்கு சென்றுவரவும், வளர்ச்சிப்பணிகளை பார்வையிடவும் பேருராட்சி சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அதிகாரிகு 'பொலிரோ' கார் வாங்கப்பட்டுள்ளது.ஹைவேவிஸ் பேருராட்சிக்கு உட்பட்டு மலைபகுதிகளான கார்டனா, மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகராஜாமெட்டு ஆகிய எட்டு ஊர்கள் உள்ளன. மலைப்பகுதிக்கு பஸ் போக்குவரத்து ஒரு நாளுக்கு இருமுறைமட்டுமே உள்ளது. பலநாட்களில் இந்த பஸ்களும் செல்வதில்லை. ரோடு மற்றும் பஸ்வசதியின்மை காரணமாக அலுவலர்கள் குறித்தநேரத்தில் அலுவலகம் சென்று பணிபுரிவதிலும், பேரூராட்சி பகுதிகளுக்கு சென்று வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுவதிலும் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில்கொண்டு, நிர்வாகஅலுவலர் மற்றும் அலுவலர்களுக்கென பேருராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ..5.50 லட்சத்தில் 'பொலிரோ' கார் வாங்கப்பட்டுள்ளது.இதன்முலம் பேருராட்சி அலுவலர்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:36
 

தெரு விளக்குகள் பராமரிப்புக்கு ரூ.20 லட்சம்

Print PDF

தினமணி 30.03.2010

தெரு விளக்குகள் பராமரிப்புக்கு ரூ.20 லட்சம்

திருவள்ளூர், மார்ச் 29: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுது பொருள்கள் வாங்க 2010-11-ம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகர்மன்றக் கவுன்சிலர்கள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது.

இக்கூட்டததில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் முத்துராமஸ்வரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், காக்களூர் சாலையில் உள்ள குட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றி அதை தூர்வாரி ஆழப்படுத்தி கரை அமைக்க வேண்டும். ராஜாஜி சாலை, வேம்புலி அம்மன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வெள்ளியூர் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்தல். முகமதலி தெரு மற்றும் சந்துகளில் விரைவாக பாதாள சாக்கடைப் பணியை முடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், திருவள்ளூர் நகராட்சியில் நகராட்சி பராமரிப்பில் உள்ள 1 முதல் 17 வார்டுகளில் 2010-11-ம் ஆண்டுக்கான தெருவிளக்குகள் பராமரிப்பு, மின் உதிரி பாகங்கள் வாங்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானமும், தனியாரின் பராமரிப்பில் உள்ள மற்ற 10 வார்டுகளிலும் தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் பழுது பார்க்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Tuesday, 30 March 2010 11:29
 

பாதாள சாக்கடை திட்ட சர்வே பணி துவக்கம்

Print PDF

தினமலர் 30.03.2010

பாதாள சாக்கடை திட்ட சர்வே பணி துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான பூர்வாங்க பணி துவங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 2006ல் 149 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது. டெண்டர் எடுக்க விண்ணப்பம் செய்தவர்கள் கூடுதல் மதிப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்தனர். மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டதில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் ஐந்தாவது முறையாக நடந்த பாதாள சாக்கடை திட்டத்துக்கான டெண்டரை சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அலுவலகம் மூலம் ரத்து செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கான டெண்டர் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக விடப்பட்டது. பேக்கேஜ் ஒன்று, இரண்டு, மூன்று என கட்டங்களாக பிரித்து டெண்டர் விடப்பட்டது.

ஹைதராபாத்தை சேர்ந்த 'பிஎஸ்சிபிபிஐஎல்' என்ற நிறுவனம் பேக்கேஜ் ஒன்று, மூன்று ஆகியவற்றை டெண்டர் எடுத்துள்ளது. பேக்கேஜ் ஒன்று அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியும், பேக்கேஜ் மூன்று அஸ்தம்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி அமைக்கப்படும். பேக்கேஜ் இரண்டு கொண்டலாம்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவேற்றப்படும். தற்போது, பேக்கேஜ் ஒன்று மற்றும் மூன்று பகுதிகளில் திட்டத்தை நிறைவேற்ற பூர்வாங்க பணியில் ஹைதராபாத் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சேலம் நான்கு ரோடு குழந்தைகள் ஏசு பேராலயம் முன்புள்ள ரோட்டில் நேற்று பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான சர்வேயில் ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வீடாக சென்று சாக்கடை, சாலை நிலமட்டம், எத்தனை அடி ஆழத்தில் குழி வெட்ட வேண்டும், மெயின் சாலையில் இணைக்கும் குறுக்கு சந்துகள், சாலை மட்டமும், வீதிகள், வீடுகளின் மட்டம், சாக்கடை இணையும் இடங்கள், சாலைகளில் இருந்து சாக்கடை அமைந்துள்ள நில மட்டம், அதன் ஆழம், அகலம் உள்ளிட்ட நில அளவை பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை அமைப்பதற்கான பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில் திட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பல நாள் கனவு திட்டமான பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

Last Updated on Tuesday, 30 March 2010 09:41
 


Page 190 of 238