Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தரைப்பால பணி விரைவில் முழுமையடையும் : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 22.03.2010

தரைப்பால பணி விரைவில் முழுமையடையும் : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்

திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப் பாக்கம் பகுதி தரைப்பாலப் பணி விரைவில் துவங்கும் என கமிஷனர் முருகேசன் கூறினார்.திண்டிவனம் காவேரிப் பாக்கம் பகுதி தரைப்பால பணி தாமதமானதால், அந்த பகுதி மக்களே திறந்து விட்டனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் முருகேசன் கூறியதாவது; இந்த பாலத்தில் தற் போது தார் ரோடு, மின்சார பணி,மின்விளக்குகள், பூசு வேலை தான் மீதமுள்ளன. தற்போதுள்ள நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆர்வ மிகுதியால் அவர்களே திறந்து விட்டனர். ஆறு மாதத் திற்கு முன்பு இந்த பால பணி மீண்டும் துவங்கிய போது, மழை காலமானதால் ஊற்றெடுத்தது. கோடை காலத்தில் இந்த பணியை செய்யலாம் என்று இருந்தோம். இந்த பாலப் பணி விரைவில் துவங்கி விடும்என்றார

Last Updated on Monday, 22 March 2010 10:11
 

அடிப்படை கட்டமைப்பு பணியை கண்காணிக்க மக்கள் குழு

Print PDF

தினமணி 19.03.2010

அடிப்படை கட்டமைப்பு பணியை கண்காணிக்க மக்கள் குழு

பெங்களூர், மார்ச் 18: அடிப்படை கட்டமைப்புப் பணிகளை கண்காணிக்க "மக்கள்குழு' அமைக்கப்படும் என்று சுயேச்சை வேட்பாளர் மா.பாரி அறிவித்துள்ளார்.

பெங்களூர் பாரதி நகர் வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் முன்னாள் கவுன்சிலர் பாரி. தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே பிரசாரத்தைத் துவக்கிய இவர், தற்போது ஒரு சுற்று பிரசாரத்தை முடித்துவிட்டார்.

தனது 2-வது சுற்று பிரசாரத்தை இப்போது துவக்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாரதி நகர் வார்டில் எந்தவிதப் பணிகளும் நடைபெறாததால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் நடமாட முடியாமலும், மழை காலங்களில் தெருக்கள் மோசமான நிலையிலும் ஆகிவிடுகின்றன. பிரசாரத்தின்போது பாரியிடம் மக்கள் இதை முறையிட்டனர்.

அப்போது, தான் தேந்தெடுக்கப்பட்டால், தரமான சாலைகள், தரமான அடிப்படைகட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதை கண்காணிக்கவும், சோதிக்கவும்மக்கள் குழுக்கள் அமைக்கப்படும் என அப்போது அவர் உறுதி அளித்தார். மேலும்பாரதி நகர் வார்டில் மிகவும் பெரிய பிரச்னையாக உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின்கழிவுநீர் அடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஉறுதி அளித்தார்.

Last Updated on Friday, 19 March 2010 10:44
 

பல மாத இடைவெளிக்கு பிறகு பாதாள சாக்கடை பணி தொடக்கம்

Print PDF

தினமலர் 18.03.2010

பல மாத இடைவெளிக்கு பிறகு பாதாள சாக்கடை பணி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாதாள சாக்கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகள் மூன்று கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. பொன்னிமான்துறையில் சுத்திகரிக்கும் நிலையம் அமைக் கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் விஸ்வா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் செய்து வரும் பணிகள் ஏப்ரலில் முடிவுறும் நிலையில் உள்ளன.கிர்லோஷ்கர் என்ற கம்பெனி எடுத்த பணி இடையிலேயே முடங்கிப் போனது. கலெக்டர், நகராட்சி நிர்வாகம் பேசியும் பலனில்லை. பிரச்னை துணை முதல்வர் கவனத்திற்கு சென்றது. அவரது அறிவுறுத்தலின் பேரில் தலைமைச் செயலக அதிகாரிகள் கிர்லோ ஷ்கர் கம்பெனியுடன் பேசி மீண்டும் பணிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று விரைவில் பணிகளை முடிக்க தர கிர்லோ ஷ்கர் கம்பெனி சம்மதித்துள் ளது. எனவே பல மாதங்களுக்கு பிறகு பாதாள சாக் கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

Last Updated on Thursday, 18 March 2010 07:11
 


Page 194 of 238