Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 24 கோடியில் குளங்களில் சீரமைப்பு பணிகள்

Print PDF

தினமலர் 11.03.2010

ரூ. 24 கோடியில் குளங்களில் சீரமைப்பு பணிகள்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 29 கோடியே 24 லட்ச ரூபாய் செலவில் ஐந்தாண்டில் 52 குளங்கள் சீரமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக நடப்பாண்டில் 3 கோடி ரூபாய் செலவில் 5 குளங்கள் சீரமைக்கப்படுகிறது. இதற்கு திட்டக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வரவுள்ள திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்டம் மூலமாக ஐந்தாண்டு திட்டமாக 29 கோடியே 24 லட்ச ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குளங்களின் தூர்வாறும் பணி, கரைகள் பலப்படுத்தும் பணி, வரத்து கால்வாய் சீரமைப்பு பணி, ஷட்டர்கள் சீர் செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

முதல் கட்டமாக நடப்பாண்டில் மருதூர் கீழக்காலில் இசக்கன்குளம் 20 லட்ச ரூபாய் செலவிலும், மருதூர் மேலக்காலில் கால்வாய்குளம் 32 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவிலும், தெற்கு பிரதான கால்வாயில் நல்லூர் மேலக்குளம் 50 லட்ச ரூபாய் செலவிலும், வடக்கு பிரதான கால்வாயில் பழையகாயல் குளம் 28 லட்சத்திலும், ஆறுமுகமங்கலம் குளம் 200 லட்சத்திலும் நடப்பாண்டில் சீர் செய்யப்படுகிறது.

நடப்பாண்டில் மொத்தம் 3 கோடியே 30 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து குளங்கள் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு திட்டக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்ட பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சேர்மன் சின்னத்துரை கூறினார்.

சுகாதாரத்துறையின் கீழ் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 328 பயனாளிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், வரு முன் காப்போம் முகாம்கள் மொத்தம் 121 நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 125 நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா தெரிவித்தார்.

இந்த முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 717 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக 855 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். .சி.ஜி 2 ஆயிரத்து 664 பேருக்கு எடுக்கப்பட்டது. ஸ்கேன் 5 ஆயிரத்து 109 பேருக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வேளாண்மை இணை இயக்குநர் லூயிஸ் ராஜரத்தினம், துணை இயக்குநர் தனசிங் டேவிட், சுகாதார பணிகள் துணை இயக்குநர் உமா, பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட உதவி செயற்பொறியாளர் நிர்மலன் கிறிஸ்துதாஸ், உதவி பொறியாளர் ரகுநாதன், வேளா ண்மை துணை இயக்குநர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை கிராமச்சாலைகள் கோட்ட உதவி செயற் பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அமுதன், உதவி பொறியாளர் கணேஷ்பாபு, திட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர

Last Updated on Thursday, 11 March 2010 06:44
 

குப்பைகளை அள்ள லாரி வாங்க முடிவு

Print PDF

தினமலர் 11.03.2010

குப்பைகளை அள்ள லாரி வாங்க முடிவு

சின்னமனூர் : சின்னமனூர் நகராட் சிக்கு ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை அள்ள கம்ப்ரசர் லாரி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சின்னமனூர் நகராட் சிக்கு திடக்கழிவு மேளாண் மை திட்டத்தின் கீழ் ரூ.15.75 லட்சத்தில் 20 எண் ணிக்கையில் டம்பர் பிளேஸ்பின் கள் இரண் டாண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது.ஆனால், இவற்றில் சேகரமாகும் குப்பைகளை அகற்றி கிடங்கில் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குப்பைகளை முழுமையாக சேகரித்து, கிடங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்ப் ரசர் டிப்பர் லாரி வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நேரம், ஆட்கள் தேவை குறையும்.

Last Updated on Thursday, 11 March 2010 06:16
 

சேலம் மாநகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் குத்தகை ஏலம்

Print PDF

தினமலர் 11.03.2010

சேலம் மாநகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் குத்தகை ஏலம்

சேலம் சேலம் மாநகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாவது அழைப்பு ஏலம் நடந்தது. கடந்த ஃபிப்ரவரி 2ல் 2010-2011ம் ஆண்டுக்கான பொது ஏலம் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. மலிங்கம் அங்காடி, அச்சுவான் ஏரி புது பஸ் ஸ்டாண்டு கட்டண வசூல், புது பஸ் ஸ்டாண்டு கட்டண கழிப்பிடம், சீனிவாச பூங்கா கட்டண கழிப்பிடம், புது பஸ் ஸ்டாண்டு பொருள் பாதுகாப்பு அறை, பழைய பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டாண்டு உள்ளிட்ட 38 இனங்களுக்கு ஏலம் நடந்தது. அதில், ராமலிங்கம் நாளங்காடிக்கு கூடுதலாக 10 சதவீதமும், புது பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டாண்டுக்கு 8 சதவீதமும், சூரமங்கலம் வார்டு அலுவலக வளாக தினசரி நாளங்காடி சுங்க வசூல் மற்றும் புல்கட்டு கடைகள் சுங்க வசூலுக்கு கூடுதலாக 12 சதவீதமும், ராமலிங்க நாளங்காடி கட்டண கழிப்பிடத்துக்கு கூடுதலாக 36 சதவீதமும், அச்சுவான் ஏரி பொருள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக 36 சதவீதமும், சூரமங்கலம் கறிக்கடை, மீன் கடைக்கு கூடுதலாக 34 சதவீதமும், ..சி., நாளங்காடிக்கு எட்டு சதவீதமும் கூடுதல் தொகை நிர்ணயம் செய்து ஏலம் கேட்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் 38 வருவாய் இனங்களுக்கு நடத்தப்பட்டு ஏலத்தில் ஒரே நாளில் 24 இனங்களுக்கான ஏலம் கேட்கப்பட்டது. நேற்று மீதமுள்ள 14 இனங்களுக்கு ஏலம் நடந்தது. ஏலத்தை எடுக்க ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். மாநகராட்சி ஏலத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Last Updated on Thursday, 11 March 2010 06:15
 


Page 198 of 238