Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 26 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் சாதனங்கள் வாங்க மாமன்றம் தீர்மானம்

Print PDF

தினமணி 10.03.2010

ரூ. 26 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் சாதனங்கள் வாங்க மாமன்றம் தீர்மானம்

திருச்சி, மார்ச் 9: திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ரூ. 26.10 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் சாதனங்களை வாங்குவது என்று மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்த அதிருப்தி மக்களிடையே கடுமையாக எழுந்தது. அனைத்துக் கட்சியினரும் இந்த விஷயத்தில் குறை கூறினர். பொதுநல அமைப்

பினர் கோரிக்கைகளை விடுத்துக் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், தலா ரூ. 17,000 மதிப்பில் 30 சிறிய வகையான புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும், தலா ரூ. 50,000 மதிப்பில் 30 புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும், தலா ரூ. 10,000 மதிப்பில் 60 தெளிப்பான்களும் என ரூ. 26.10 லட்சம் மதிப்பில் சாதனங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதுதொடர்பாக, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் இயக்குநர் மூலம், முதன்மை பூச்சியியல் வல்லுநரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவரும் கடந்த மார்ச் 1-ம் தேதி தெளிவுரைகளைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கொசு ஒழிப்புப் பணிக்கான சாதனங்களை வாங்குவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இதற்கான தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில், இதுதொடர்பாக பல்வேறு மாமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்துப் பேசினர்.

கொசு ஒழிப்புப் பணியின் அவசர அவசியம் கருதி, இந்தச் சாதனங்களை விரைவில் வாங்குவது என்று மாமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 10 March 2010 09:15
 

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

Print PDF

தினமணி 10.03.2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி, மார்ச் 9: பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகளின் நலனை மேம்படுத்த அரசு தனி வாரியம் அமைத்துள்ளது.

÷இதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெறவும், வியாபாரிகளை கூட்டி குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

÷எனவே பண்ருட்டி நகரில் உள்ள சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயப் பிரிவில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்

Last Updated on Wednesday, 10 March 2010 09:02
 

சுரங்க நடைபாதை அமைக்க கூடுதல் நிதி: அனைத்து கட்சி கூட்டத்தில் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 09.03.2010

சுரங்க நடைபாதை அமைக்க கூடுதல் நிதி: அனைத்து கட்சி கூட்டத்தில் வேண்டுகோள்

கோவை : கோவை மாநகராட்சியில் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க நிதி ஒதுக்க, பட்ஜெட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.கோவை மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் உதயகுமார் பேசியதாவது: அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன், காந்திபுரம், உக்கடம், கிராஸ்கட்ரோடு பகுதிகளில் சுரங்கநடைபாதை அமைப்பதற்கும், ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகளுக்கு நிதி வருவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. நகரில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளதால் மாநகராட்சி நிதியை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் போது, சுடுகாட்டையொட்டியுள்ள ஸ்கீம் ரோட்டில் பாலம் அமைத்தால், வெள்ளலூருக்கு போத்தனூரை சுற்றி குப்பை எடுத்துச்செல்லும் தூரம் குறையும். போக்குவரத்து எளிமையாகும். காங்., தலைவர் திருமுகம்: காந்திபுரம் மத்திய, நகர, திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் வகையில் லிப்டுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் போது, மல்ட்டிலெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டை கோவையின் முன்மாதிரி ரோடாக மாற்றவேண்டும். மாநகராட்சி பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாநகராட்சி நிதியிலிருந்து ஸ்னாக்ஸ் வாங்கிக்கொடுக்க நிதி ஒதுக்க வேண்டும். .கம்யூ.,கல்யாணசுந்தரம்: மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.., தரச்சான்று வாங்கும் போதே பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்வேண்டும். பூங்கா இல்லாத வார்டுகளில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். கொசு அடிக்கும் பேட்டை இலவசமாக வீடுதோறும் வழங்க வேண்டும் என்றார்.

நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.., ராஜ்குமார், மா.கம்யூ., முருகேசன், பா.., கோமதி, தே.மு.தி.., சிவக்குமார், நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர

Last Updated on Tuesday, 09 March 2010 06:43
 


Page 199 of 238