Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சீசனுக்கு தயாராகுது நேரு பூங்கா : பராமரிப்பு பணிகளில் 'விறுவிறு'

Print PDF

தினமலர் 25.02.2010

சீசனுக்கு தயாராகுது நேரு பூங்கா : பராமரிப்பு பணிகளில் 'விறுவிறு'

கோத்தகிரி: கோடை சீசனுக்காக, கோத்தகிரி நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோத்தகிரி பேரூராட்சி பராமரிப்பில் இருந்து வந்த நேரு பூங்கா, 7 ஆண்டுகளுக்கு முன், தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு நிதியின் கீழ் 30 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கப்பட்டு, பூங்கா சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இரு ஆண்டுகளாக கோடைவிழா நாட்களில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் சீசனுக்காக, பூங்கா நுழைவு வாயில் நடைபாதை, நாற்காலி, அழகிய குடை பராமரிக்கப்பட்டு வருகிறது. பல வண்ணங்களிலான 100க்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதங்களுக்குள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்கள் பூத்துக்குலங்கும் வகையில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 06:05
 

ரூ.1 கோடியில் நவீன தகன மேடை:சிற்ப வேலைகளுடன் நுழைவு வாயில்

Print PDF

தினமலர் 24.02.2010

ரூ.1 கோடியில் நவீன தகன மேடை:சிற்ப வேலைகளுடன் நுழைவு வாயில்

வேலூர்:வேலூர் பாலாற்றங்கரையில் ரூ. ஒரு கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நவீன தகன மேடையும், சிற்ப வேலைப்பாடுகளுடன் நுழைவு வாயிலும் அமைக்கப்படுகிறது.வேலூர் மாநகராட்சி சார்பில் பாலாற்று மயானத்தில், உடல்களை தகனம் செய்ய ரூ. 45 லட்சத்தில் தகன மேடையும், அதையொட்டி ரூ.25 லட்சம் செலவில் தியானமண்டபம், பூங்கா மற்றும் கலைநயம் மிக்க நுழைவு வாயில் என ரூ.ஒரு கோடி செலவில் தகன மேடை கட்டப்பட்டு வருகிறது.இதில், தகவ மேடையில், உடல்களை தகனம் செய்ய நவீன "பாய்லருடன்' கூடிய அடுப்பு கட்டப்பட்டு வருகிறது. தகனமேடையில் உள்ள ராட்சத பாய்லருக்கும் செல்லும் உடல்கள் 30 நிமிடங்களில் எரிந்து, சாம்பலாக வெளியே வந்து விடும். பின்னர் அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதுகுறித்து மேயர் கார்த்திகேயன் கூறுகையில், நவீன தகன மேடை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அருகில் தியானமண்டபம், பூங்கா, நவீன கழிவறைகள் கட்டப்படுள்ளது.நுழைவு வாயில் ரூ. 8.44 லட்சம் செலவில், சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்காக மாமல்லபுரம் சிற்பக்கலைஞர்கள் மூலம் கலைநயத்துடன், நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது,இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Wednesday, 24 February 2010 07:10
 

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும்: கலெக்டர்

Print PDF

தினமலர் 24.02.2010

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும்: கலெக்டர்

கடலூர்: கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. மழைக்காலமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அதன் காரணமாக பணிகளை துரிதப்படுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். அதில், இதுவரை பணிகள் துவங்காமல் உள்ள 24 தெருக்களில் 8081 மீட்டர் பணிகள் உடனே துவக்கப்படும். 66 தெருக்களில் 22479 மீட்டர் முழுமையாக முடியவில்லை. மொத்தமுள்ள 5412 மேனுவலில் 5120 முடிக்கப்பட்டுள்ளன. 15050 வீட்டு இணைப்புகளில் 13390 முடிக்கப்பட் டுள்ளன. இதுவரை 152.69 கி.மீ., குழாய் கள் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 27 கி.மீ., குழாய் பதிக்க வேண்டும். மேனுவல் (ஆளிறங்கும் குழிகள்), வீட்டு இணைப்பு ஆகியவற்றால்தான் சாலை போடும் பணி தாமதமாகி வருகிறது. சிமென்ட் சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுவரை 85 சதவீத பணிகள் முடிந் துள்ளன. இன்னும் 15 சதவீதம்தான் பாக்கியுள்ளன. இத்திட்டத்திற்கான திட்டமதிப்பீட்டு தொகை 66 கோடியில் இதுவரை 19.96 கோடி ரூபாய் செலவு செய்யப்பட் டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என்றார். குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ரகுநாத், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், துணைச் சேர்மன் தாமரைச்செல்வன் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 06:42
 


Page 202 of 238