Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.2 லட்சத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்

Print PDF

தினமலர் 18.02.2010

ரூ.2 லட்சத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்

குடியாத்தம் : குடியாத்தம் நகராட்சி சார்பில் 2லட்சம் ரூபாயில் புதிதாக வாங்கப்பட்ட கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கமிஷனர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொறியாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். இயந்திரத்தை நகராட்சி தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் மோகன், பிரகாஷ் சவுத்ரி, சைதைபாபு, அன்வர்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 18 February 2010 07:18
 

உள் கட்டமைப்புக்கு தமிழக அரசு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 17.02.2010

உள் கட்டமைப்புக்கு தமிழக அரசு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு

பேராவூரணி,பிப்.16: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியின் உள் கட்டமைப்பு வசதிக்கு தமிழக அரசால் ரூ. 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராவூரணி பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் திங்கள்கிழமை கூறியது:

பேராவூரணி பேரூராட்சியில் குடிநீர் மேம்பாடு, சுகாதாரம், மழை நீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை,போக்குவரத்து, தெரு விளக்கு, குடிசை மேம்பாடு மற்றும் நகர்புற வறுமைக் குறைப்புத் திட்டங்கள், சமுதாய உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் ரூ. 24 கோடி 90 சத மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 15 ஆண்டுகளில் பணிகள் முடிவுறும் நிலையைப் பொறுத்து, தவணை முறையில் நிதி வழங்கப்படும். இந்த நிதியில் 10 சத பங்குத்தொகையை பேரூராட்சி நிர்வாகம் 15 ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.

பேராவூரணி பேரூராட்சியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நிதியைப் பெற ஆலோசனை வழங்கி, முயற்சி மேற்கொண்ட மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்திற்கும் நன்றி என்றார் அவர்.

பேரூராட்சி நிர்வாக அலுவலர் ப. ஜனார்த்தனன், அலுவலர் ஷேஷாத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

உதயேந்திரம் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 17.02.2010

உதயேந்திரம் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

வாணியம்பாடி:உதயேந்திரம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உதயேந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அதன் அலுவலக வளாகத்தில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் மணி, செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். இதில் 13க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உதயேந்திரம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகம் கட்டுவது, மேட்டுப்பாளையம், பள்ளிப்பட்டு மற்றும் பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், மேலும் புதிதாக தெருவிளக்குகள் அமைத்தல் உட்பட 15க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சிலர் தங்களது வார்டுக்கு அடிப்படை வசதிகள் கேட்டும் வலியுறுத்தினர். இதற்கு தலைவர், மனு எழுதிக் கொடுங்கள் அதனை மன்றத்தில் தீர்மானம் வைத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கழிவுநீர் தேங்கி குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனையும் மன்றத்தில் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கூறினார். இதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் மனுவாக எழுதிக் கொடுங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:43
 


Page 205 of 238