Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூர் மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

Print PDF

தினமணி 01.02.2010

பெரம்பூர் மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும்: மு.. ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த துணை முதல்வர் மு.. ஸ்டாலின். உடன் (இடது)

சென்னை, ஜன. 31: பெரம்பூர் மேம்பாலம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும், முதல்வர் கருணாநிதி அதை திறந்து வைக்க உள்ளார் என்று துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கூறினார்.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக லிப்டுடன் கூடிய நடை மேம்பாலம், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கூறியது:

பெரம்பூர் மேம்பாலப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாலத்துக்கு அருகில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைக்க உள்ளார்.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குவதால், லிப்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு, ரூ. 60.88 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் சைதாப்பேட்டை மண்டலம்}9}லும், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் இடத்தின் அருகில் வாலாஜா சாலையிலும் தலா ரூ. 94 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நடை மேம்பாலங்களின் பயன்பாடு மற்றும் வரவேற்பைப் பொருத்து, சென்னையில் தேவையுள்ள மற்ற பகுதிகளிலும் லிப்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றார்.

மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி: இந்த நடைமேம்பாலம் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்படும்போது, லிப்ட் பாதி வழியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக "பாட்டரி' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 நிமிடங்களுக்கு லிப்டை இயக்க முடியும். லிப்டை இயக்குவதற்காக உதவியாளர் ஒருவரும் மாநகராட்சி சார்பில் பணியமர்த்தப்பட உள்ளார் என்றார். விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 01 February 2010 09:58
 

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

Print PDF

தினமலர் 01.02.2010

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

திட்டக்குடி : பெண்ணாடம் பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது.பெண்ணாடம் பேரூராட்சி கேளிக்கை வரி மானியத் திட்டம் 2008- 09ன் கீழ் பத்து லட்சமும், கலெக்டர் வளர்ச்சி நிதி ஒரு லட்சமும் சேர்த்து பஸ் நிலைய வளாகத் தில் நவீன சுகாதார வளாகம் கட்டப் பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி துணைத் தலைவர் காதர், தி.மு.., நகர செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முத்துவேல் வரவேற்றார். கவுன்சிலர்கள் அருள், விஜயகுமார், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, தி.மு.., நிர்வாகிகள் சுகுணா, சீனிவாசன் வாழ்த்தி பேசினர். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் மாரிமுத்து, எழிலரசி, ஞானபிரகாசம், செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Last Updated on Monday, 01 February 2010 06:24
 

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.24,000 கோடி மூலதனம் தேவை

Print PDF

தினமணி 28.01.2010

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.24,000 கோடி மூலதனம் தேவை

காரைக்கால், ஜன. 27: நாட்டின் உள்கட்டமைப்பை அதிகரிக்க உள்நாடு, வெளிநாட்டினரிடமிருந்து ரூ.24,000 கோடி மூலதனத்தை எதிர்பார்த்து அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றார் மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி.

÷காரைக்காலில் ரூ.1,200 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் கப்பல் துறைமுகத்தில், முதல் கட்டமாக 2 கப்பல்கள் வந்து நிற்கும் வகையிலான பகுதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

÷அதேபோல, நாகூலிருந்து காரைக்கால் வரையில் அகல ரயில் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நாகூரிலிருந்து துறைமுகம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

÷இதையடுத்து, நாகூர்- துறைமுகம் இடையே சரக்கு ரயில் சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரயில் போக்குவரத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்து, மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி பேசியது:

÷காரைக்காலில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக காரைக்கால் துறைமுகம் வளரும் வகையில் இங்கு அதிக முதலீடு செய்யப்படுகிறது.

÷நாட்டில் பல்வேறு வகைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெளிநாட்டினர், உள்நாட்டினரிடமிருந்து ரூ.23,92,000 கோடியை எதிர்பார்க்கிறோம். அதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

÷காரைக்காலில் அமையவுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்காக ரூ.320 கோடியை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் இன்னொரு புதிய நகரம் இங்கு உருவாகும்.

÷தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி அடுத்த 4 மாதங்களில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். ரூ.1-க்கு மாணவர்கள் பஸ்ஸில் செல்லும் திட்டம் அடுத்த சில நாள்களில் காரைக்காலில் தொடங்கப்படும் என்றார் நாராயணசாமி.

÷புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் பேசியது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் துறைமுகத்தின் செயல்பாடு இருக்க வேண்டும். உலக வெப்பமயமாதலுக்கு நிலக்கரியும், சிமென்டும் ஒரு காரணம். எனவே, துறைமுகத்தில் இவைகளைக் கையாளும் போது அதிக கவனம் தேவை. துறைமுகத்தின் 2-ம் கட்டப் பணி நிறைவடைந்தால், மேலும் 2 கப்பல்கள் இங்கு வந்து நிற்க முடியும். இதன் மூலம் 2.10 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்து உள்நாட்டு தேவைகளுக்கு அனுப்ப முடியும். துறைமுகத்தின் மூலம் காரைக்கால் தொழில் துறை, சுற்றுலா உள்ளிட்டவை வளரும் என்றார் ஆளுநர் இக்பால்சிங்.

÷புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் இ. வல்சராஜ், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

÷சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.மாரிமுத்து, பி.ஆர்.சிவா, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷முன்னதாக மார்க் நிறுவனத் தலைவர் ஜி.ஆர்.கே. ரெட்டி வரவேற்றார். காரைக்கால் துறைமுக அதிகாரி ஆச்சாரியலு நன்றி கூறினார்.

÷முதல் கட்டமாக அரியலூர் பகுதி ஈச்சங்காடு பகுதிக்கு 3800 டன் நிலக்கரி ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

Last Updated on Thursday, 28 January 2010 10:23
 


Page 209 of 238