Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கூடலூர் பேரூராட்சியில் புதிய கட்டமைப்பு பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 3.11.2009

கூடலூர் பேரூராட்சியில் புதிய கட்டமைப்பு பணிகள் துவக்கம்

பெ.நா.பாளையம், அக். 2: பெரியநாயக்கன்பாளையத்தையடுத்து கூடலூர் பேரூராட்சியில் 216.72 கோடிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பேரூராட்சியில் உள்ள ரிசர்வ் சைட்டுகளை பாதுகாப்பதற்கென சுற்றி மின்வேலி அமைப்பது, நேருநகர், திருமலைநாயக்கன்பாளையம், சி.எஸ்.நகர், சாமையன் நகர், ரங்கநாயகி நகர், ராவத்தக் கொல்லனூர் உள்ளிட்ட பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் 65 இடங்களில் வடிகால் வசதி, தார்ச்சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன.

இதனை அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செயல் அலுவலர் கே.கல்யாணசுந்திரம் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுவாமிநாதன், நாகராஜ், செல்வராஜ், குருந்தாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:12
 

இந்திரா நகரில் ரூ. 2 கோடியில் புதிய பாலம்

Print PDF

தினமணி 3.11.2009

இந்திரா நகரில் ரூ. 2 கோடியில் புதிய பாலம்

சென்னை, நவ. 2: சென்னை அடையாறு இந்திரா நகர் -தரமணி ராஜீவ்காந்தி சாலையை இணைக்கும் பாலம், ரூ. 2 கோடியில் புதிதாகக் கட்டப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அடையாறு இந்திரா நகரையும்,தரமணி ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தை, பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலையிலிருந்து செங்கற்களை ஏற்றிவந்த லாரி, தடையை மீறி அந்த பாலத்தில் சென்றது. இதனால் பாரம் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.

சேதமடைந்த பாலத்தை மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "இடிந்து விழுந்துள்ள பாலம் ரூ. 2 கோடியில் விரைவில் புதிதாகக் கட்டப்படும். 60 அடி அகலமும், 150 அடி நீளமும் கொண்ட நான்கு வழிப் பாதையாக இந்தப் பாலம் அமைக்கப்படும். கவுன்சிலில் ஒப்புதல் பெற்றவுடன், உடனடியாக பாலம் கட்டும் பணி தொடங்கும். தடையை மீறிய லாரி டிரைவர் மீது, மாநகராட்சி செயற்பொறியாளர் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:42
 

திடக் கழிவுகளை அகற்ற ரூ. 1.26 கோடியில் வாகனங்களை வாங்கியது மாநகராட்சி

Print PDF

தினமணி 2.11.2009

திடக் கழிவுகளை அகற்ற ரூ. 1.26 கோடியில் வாகனங்களை வாங்கியது மாநகராட்சி

திருச்சி, நவ. 1: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் தேங்கும் திடக் கழிவுகளை அகற்ற, ரூ. 1.26 கோடியில் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியது.

மாநகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில், இந்த வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

திருச்சி மாநகராட்சியில் 12-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, திடக் கழிவு மேலாண்மை பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து ரூ. 1.26 கோடியில் 8 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 30 கன்டெய்னர்கள், 6 டம்பர் பிளேசர் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது.

இந்த வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதால் மூன்றில் ஒரு பங்கு நேரம் குறையும். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற இந்த வாகனங்கள் பயன்படும்.

ரூ. 14 லட்சம் செலவில் புதிய வாகனம்: திருச்சி மாநகராட்சியில் குடிநீர் விநியோக பகிர்மானக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிந்து பழுதை அகற்றும் பணிக்காக, ரூ. 14 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்ட மிதரக வாகனத்துக்கான சாவியையும் ஓட்டுநரிடம் அமைச்சர் நேரு வழங்கினார்.

இந்த வாகனத்தில் உள்ள கருவிகள் மூலம் நிலத்தடியில் 5 மீட்டர் வரை பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாயில் ஏற்படும் கசிவினை கண்டறிய முடியும். குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் குடிநீரின் தன்மையை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

பரிசுகள் அளிப்பு: தொடர்ந்து, உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என். நேரு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மேயர் எஸ். சுஜாதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி வெ. தட்சணாமூர்த்தி, கோட்டத் தலைவர்கள் அறிவுடைநம்பி, பாலமுருகன், ஜெரோம் ஆரோக்கியராஜ், . குமரேசன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, நிர்வாகப்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 226 of 238