Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ1.50 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினகரன்            31.12.2013

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ1.50 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை

ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி 9வது வார்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. சேலம்-சென்னை மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்து செல்வதால் இந்த பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் ஸ்டாண்ட் வளாகம் குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.

இதனையடுத்து பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஆத்தூர் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நகரமன்ற தலைவர் உமாராணியின் முயற்சியால் அரசிடம் இருந்து ரூ1.50 கோடி நிதி பெறப்பட்டு, பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாதேஸ்வரன், நகரமன்ற தலைவர் உமாராணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மோகன், ஆணையாளர் (பொ) ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, ராமலிங்கம், குணசேகரன், நாகராஜ், அதிமுக நகர துணைச் செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பள்ளபாளையம் பேரூராட்சி புதிய கட்டடம் திறப்பு

Print PDF

தினகரன்            31.12.2013

பள்ளபாளையம் பேரூராட்சி புதிய கட்டடம் திறப்பு

சூலூர், :  கோவை சூலூர் பள்ளபாளையம் பேரூராட்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்ட ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, பணிகள் நிறைவுபெற்று விட்டது. இதை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வீடியோ கான்பரஸ் மூலம் திறந்துவைத்தார்.

இதையடுத்து, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் சண்முகம், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், துணைத்தலைவர் பிரகாஷ் செயல்அலுவலர் சுந்தர்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் ராஜசேகரன், ஆனந்தகுமார், குமாரசாமி, பால்ராஜ், பிரேமாகுமார், செல்வி, முருகன், குஞ்சம்மாள், ஜெயந்தி, ஈஸ்வரி, வசந்தகுமார், ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், பணி ஆய்வாளர் சந்திரபோஸ்காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம்: முதல்வர் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம்: முதல்வர் திறப்பு

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூரில் ரயில் நிலையம் எதிரில் பேருராட்சி அலுவலகம் உள்ளது. மிகப் பழமையான இந்த அலுவலகம் நாளடைவில் சேதம் அடைந்தது.

 இதனால், ரயில்வே கேட் அருகில் சமுதாயக் கூடத்தில் இயங்கி வந்தது. அவ்விடத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

  இந்நிலையில், புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்தார். குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராமநாதன், உதவிக் கோட்டப் பொறியாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.

 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.பாலு, பேருராட்சி துணைத் தலைவர் ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 25 of 238