Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

Print PDF

தினத்தந்தி            16.12.2013

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளியங்காடு பகுதியில் தார்சாலை, பங்களாப்புதூரில் கான்கிரீட் சாலை, வாணிப்புத்தூரில் குடிநீர் வசதி, டி.என்.பாளையத்தில் சாக்கடை வசதி ஆகியவற்றிற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். விழாவில் அந்தியூர் எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ரங்கநாதன், கவுன்சிலர்கள் ஹரிபாஸ்கர், அண்ணாத்துரை, வெள்ளியங்கிரிநாதன், முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

Print PDF

தினமலர்             16.12.2013

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், எட்டு இடங்களில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த அக்., மாதம் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், வருவாய்த்துறை, போலீஸ் உயரதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், இரவு நேரங்களில், சாலை சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநகராட்சி கமிஷனரின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, 16 மீட்டர் உயரத்தில், உயர்கோபுர மின் விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, தலா 6.75 லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பழைய பஸ் ஸ்டாண்டின் மத்தியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், பஸ் ஸ்டாண்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுகிறது. குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை பகுதி, அவிநாசி ரோடு பெரியார் காலனி சந்திப்பு, 15 வேலம்பாளையம் சாலை சந்திப்பு, மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளம் பகுதி, பல்லடம் ரோடு தென்னம்பாளையம், காங்கயம் ரோடு பெரியகடை வீதி சந்திப்பு ஆகிய எட்டு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

இப்பணி மேற்கொள்ள 54 லட்சம் ரூபாய்க்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிக்கு, இன்று நடக்கும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியதும் பணி துவங்கும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மழைநீர் வடிகால்வாய்களை தூர்வார புதிய இயந்திரம் சோதனை முறையில் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்             16.12.2013

மழைநீர் வடிகால்வாய்களை தூர்வார புதிய இயந்திரம் சோதனை முறையில் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

சென்னை: மனிதர்களால் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படுவதை தவிர்க்கும் வகையில், அந்த பணிகளை சோதனை முறையில் புதிய இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விஷவாயு அபாயம்சென்னை மாநகராட்சியில், 2,000 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய, ஆள் நுழைவு குழிகள் வழியாக மனிதர்கள் இறங்கி, சுத்தம் செய்யும் நிலை தற்போது உள்ளது.வெள்ளபாதிப்பை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல், மழைநீர் வடிகால்வாய்கள், ஆண்டிற்கு இரண்டு முறை தூர்வாரப்படுகின்றன.

அந்த பணிகள், சுகாதார பணியாளர்கள் மூலம் செய்யப்படுகின்றன.தற்போது, சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.இதை தவிர்க்கும் வகையில், இனி, மழைநீர் வடிகால்வாய்களை, இயந்திரங்களை கொண்டு தூர்வார மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, சோதனை முறையில், 'ஸ்லட்ஜ்டு பம்ப்' என்ற புதிய இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு, மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.தற்போது, இரண்டு இயந்திரங்கள் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளன. ஒரு இயந்திரத்தின் விலை, 10 லட்சம் ரூபாய்.வெற்றிகரமாக இயந்திரம் செயல்படும் பட்சத்தில், வார்டுக்கு ஒரு இயந்திரம் வாங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அனைத்து வார்டுகளும்இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய இயந்திரம் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இது சாத்தியப்படாத பட்சத்தில், வேறு இயந்திரங்கள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படும்.

நீடித்து உழைக்கவும், மழைநீர் வடிகால்வாய்களை எளிதில் சுத்தம் செய்யவும் ஏற்ற இயந்திரம் கண்டறியப்பட்டு, அனைத்து வார்டுகளுக்கும் வாங்கி தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 


Page 30 of 238