Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

Print PDF

தினகரன்           12.12.2013

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட சின்னாண்டிபாளையத்தில் கோவை பாராளுமன்ற உறுப் பினர் நிதியில் இருந்து ஒதுக்கிய ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு கவுன்சிலர் வசந்தாமணி வரவேற்றார். கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திருப்பூர் மேயர் விசாலாட்சி, ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

 மேயர் விசாலாட்சி பேசுகையில் ‘தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி திருப்பூரில் உள்ள 60 வார்டுகளையும் ஒருங்கிணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட 2 ஆண்டுகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

 ஊராட்சியாக இருந்த பல பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே நகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் நிதி மூலமாக குறிப்பாக 59வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 85 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன’ என்றார்.

 

நகராட்சி அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டும் பணி

Print PDF

தினமலர்            07.12.2013

நகராட்சி அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டும் பணி

சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டும் பணிக்காக பூமி பூஜை விழா நடந்தது.சிதம்பரம் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணிக்காக பூமி பூஜை @நற்று நடந்தது. விழாவிற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கினார்.

நகரமன்ற தலைவி நிர்மலா சுந்தர் பூமி பூஜை öŒ#து பணியை துவக்கி வைத்தார். 2.5 கோடியில் 1.25 கோடி மானியமாகவும். 1.25 கோடி நிதி நகராட்சி சார்பிலும் செலவிடப்படுகிறது. விழாவில், துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ், தியாகு, சிகாமணி, ஜெயவேல், ராஜன், பானுமதி, ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இரண்டு தளம் கொண்ட புதிய அலலுவலகம் கட்டும் பணியை ஒரு ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடியில் கட்டடம்

Print PDF

தினமணி             07.12.2013

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடியில் கட்டடம்

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிதம்பரம் நகராட்சி தற்போதைய அலுவலகத்துக்குப் பின்புறம் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி ரூ 1.25 கோடி, நகராட்சி நிதி ரூ 1.25 கோடி, ஆக மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நகராட்சி நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், நகராட்சி எழுத்தர் காதர்கான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 


Page 32 of 238