Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம்

Print PDF

தினமணி             07.12.2013

ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம்

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

  இந்த வாகனத்தை மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர். முன்னதாக கீழரண் சாலை, குதுப்பா பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தனர்.

  மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்கும் வகையில் வாங்கப்பட்டுள்ள 800 குப்பைத் தொட்டிகளையும் மேயர் பார்வையிட்டார். கீழரண் சாலையில் லாரி நிறுத்துமிடத்தில் ஓட்டுநர்களுக்காக தங்கும் இடம், குளியலறை, கழிப்பறை அமைக்கவுள்ள இடமும் பார்வையிடப்பட்டது.

  இóந்த ஆய்வின்போது, துணை மேயர் மரியம் ஆசிக், அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், உதவி ஆணையர் பாஸ்கரன் உள்ளிóட்டோர் உடனிருந்தனர்.

 

சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிகால் வசதி

Print PDF

தினமணி             07.12.2013

சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிகால் வசதி

பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள 6, 7-ஆவது வார்டுகளைச் சேர்ந்த பெரிய கிணறு வீதி, முருகன் மளிகை வீதி, தபால் நிலைய வீதிகளில் நீண்ட காலமாக வடிகால் வசதி குறைவாகவே இருந்தது. சவுடம்மன் கோவில் வீதி குறுகலாக இருந்ததால் அதில் இதுவரை வடிகால் வசதி செய்யப்படவில்லை. இப்பகுதி மக்கள் கழிவு நீரைத் தங்களுக்குச் சொந்தமான இடத்திலேயே தேக்கி வைத்திருந்தனர். இதையடுத்து, புதிய வடிகால் வசதி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொது நிதியின் கீழ் வடிகால் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பூமிஜையை பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

வார்டு கவுன்சிலர்கள் ஹரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தண்டபாணி, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

Print PDF

தினகரன்          02.12.2013

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி  சார்பில் கொட்டப் பட்டில் ரூ.20.30 லட்சம் செலவில் நாய்கள் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அரங்கு அமைக் கும் பணி விரைவில் துவங்குகிறது.

திருச்சி மாநகராட்சி யில் உள்ள 4 கோட்டங்களி லும் நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் பலர் பாதிக்கப் பட்டு வருகின்ற னர். இத னால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பிடிக்கப்பட்ட நாய்களை திருவளர்ச்சோலைக்கும், பனையபுரத்திற் கும் இடையில் கொள்ளிட கரையில் விட்டுவிட்டனர். இதில் பல நாய்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அச்சுறுத்துகிறது.

இதனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், நாய் களை பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வது என்று முடிவு செய்தது. அதற்காக கொட்டப்பட் டில் துப்புரவு பணியாளர் கள் குடியிருப்பு அருகில் ரூ.20.30 லட்சம் மதிப்பில் நாய்கள் இனக்கட்டுப் பாட்டு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க முடிவு செய்தது. அதன்படி நாய் கள் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க பணி யாணை தயாரிக்கும் பணி யில் இறங்கியுள்ளது.

இந்த பணி விரைவில் துவங்க உள்ளது. ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே நாய்கள் தொல்லை அதிகம். பிடித்து  வரும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து எங்கள் பகுதியில் விட் டால் மேலும் தொல்லை அதிகமாகும். எனவே எங் கள் பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க வேண்டாம்‘ என்று 38வது வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த பகுதியில் இருந்து நாய் களை பிடிக்கிறதோ, அந்த பகுதியிலேயே நாய்களை விட்டுவிடுவோம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மிக விரைவில் கொட்டப்பட்டில் நாய்க ளின் இன கட்டுப்பாட்டை தடுக்க, அறுவை சிகிச்சை அரங்கு அமைகிறது. 

 


Page 33 of 238