Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலி குளிர்பான கம்பெனிக்கு சீல் காலாவதியான பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்   12.05.2010

போலி குளிர்பான கம்பெனிக்கு சீல் காலாவதியான பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல்: சாணார்பட்டியில் போலியாக குளிர்பானம் தயாரித்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காலாவதியான ஆட்டா மாவு, ரொட்டி, பிஸ்கட்,புட்டு மாவு அழிக்கப்பட்டன.சாணார்பட்டியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், டாக்டர் பூங்கோதை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமாலுதீன், நேர்முக உதவியாளர் அப்துல்பாரி ஆகியோர் ஒட்டல்கள்,சோடா கம்பெனி, உணவு விடுதி, மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.

கொசவபட்டியில் போலியான லேபிள் ஒட்டி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும் சாணார்பட்டி கடைகளில் காலாவதியான பிஸ்கட், ரொட்டி, சர்பத், ஆட்டா மாவு, புட்டுமாவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. சுகாதார துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களின் பாக்கெட் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி பற்றிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் புகார் கூறுவதற்கு வசதியாக சுகாதார ஆய்வாளர் மொபைல் எண்கள் எழுதி வைக்கப்படும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது காலாவதியான பொருட்கள் இருப்பதை கண்டால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். *பழநியில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகராட்சி சுகாதார அதிகாரி (பொறுப்பு) பர்வீன் பானு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொருட்களை பறிமுதல் செய்தனர். சுகாதாரமில்லாத 2 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது.