Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

50 ஆயிரம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி 12.05.2010

50 ஆயிரம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

திருத்தணி,மே 11: திருத்தணியில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.

÷திருத்தணி கந்தசாமி தெரு, மபொசி சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் கண்டுப்பிடித்து அழித்தனர்.

÷செவ்வாய்க்கிழமை திருத்தணி நகராட்சி ஆணையர் செண்பகராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கருப்பைய்யா, மேற்பார்வையாளர் சாமுவேல் ஆகியோர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அரக்கோணம் ரோட்டில் உள்ள மளிகைக் கடை, பேக்கரி, டீக்கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட கடைகளில் திடீரென ஆய்வு நடத்தினர்.

÷அப்போது காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ÷சாக்லெட், பேரிச்சை பழம், சத்துமாவு, அப்பளம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை நகராட்சி ஊழியர்கள் அழித்தனர். திருத்தணி நகராட்சி பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டுப்பிடித்து அழிக்கப்பட்டன.

÷தொடர்ந்து சோதனை நடத்தப்படும். காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் கருப்பைய்யா தெரிவித்தார்

Last Updated on Wednesday, 12 May 2010 11:17