Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் கொசுக்களை ஒழிக்க 25 ஆயிரம் கம்பூசியா மீன் மேட்டூரில் இருந்து வந்தன

Print PDF

தினகரன் 28.06.2010

மாநகரில் கொசுக்களை ஒழிக்க 25 ஆயிரம் கம்பூசியா மீன் மேட்டூரில் இருந்து வந்தன

கோவை, மே 28: கொசுக்களை அழிக்க மேட்டூரிலிருந்து 25 ஆயிரம் கம்பூசியா மீன்கள் கொண்டு வரப்பட்டன.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொ ட்டி கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 25 கொசு ஒழிப்பு இயந்திரங் கள் வாங்கப்பட்டன. நீர் நிலைகளில் கொசுக்கள் அதி கமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

மேட்டூர் அணையிலிருந்து இலவசமாக 25 ஆயிரம் கம்யூசியா மீன்கள் கொண்டு வரப்பட்டன. மீன்கள், கொசு எண்ணிக்கை அதிகமாக உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, குடியிருப்பு, அடுக்குமாடி, பொது குடிநீர் தொட்டிகளில் விடப்பட்டு வருகிறது.

சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வார்டு வாரி யாக கம்பூசியா மீன்கள் குடி நீர் தொட்டியில் விடப்பட்டு வருகிறது. கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக தொட் டியில் கம்பூசியா மீன்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தினமும் மீன்களை மாநகரா ட்சி வார்டு வாரியாக வழங்கி வருகின்றனர்.

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறியதாவது;

மாநகராட்சியில் வார்டு வாரியாக கொசு ஒழிப்பு பணி துவங்கியது. 4 தெருக்களுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, சுகா தார ஆய்வாளர் தலைமை யில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி, நீர் நிலைகளில் கொசுக்கள் அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். கொசுக்களை ஒழிக்க கம்பூசி யா மீன் பயன்படுத்துகிறோம். முதல் கட்டமாக 25 ஆயிரம் மீன் பெறப்பட்டுள்ளது. தே வைப்பட்டால் மேலும் பெறப் படும். குடிநீர் தொட்டி நீள, அகலத்தை பொறுத்து மீன் கள் விடப்படுகிறது. இந்த மீன்கள் கொசு முட்டைகளை அழித்து விடும். கொசு பெ ருக்கம் இருக்காது. நல்ல நீர் நிலையில் வாழும் கொசுக்களின் மூலமாகவே அதிக நோய்கள் பரவுகிறது. இதை தடுக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. கம்பூசியா மீன் மூலம் கொசு பெருக்கம் கட்டுப்படுத்தும் திட்டம் வெற்றி கரமாக அமையும். இது தவிர, மாநகரில் டயர், டியூப், பூந் தொட்டி, ஜாடி, தேங்காய் தொட்டி உள்ளிட்டவற்றில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி துவங்கியது. நகரில் குப் பை, கழிவுகளை தேங்காமல் உடனடியாக அகற்றி வருகி றோம். ரோடு, பொது இடம், குப்பை மேடுகளில் குப்பை கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. செம்மொழி மாநாட் டிற்காக 220 துப்புரவு தொழி லாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் தற்கா லிக துப்புரவு தொழிலாளர் கள் 400 பேர் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் நகரில் சுகாதார பணிகள் மேம் படும். இறைச்சி கழிவுகளை கண்ட இடங்களில் கொட்ட கூடாது என அறிவுறுத்தியிருக்கிறோம். இறைச்சி கழிவு களை கருப்பு பைகளில் கொட்டி அப்புறப்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசு அழிப்பு படை:

கம்பூ சியா மீன்கள் கொசு இன அழிப்பு படையாக கருதப்படுகிறது. 3 செ.மீ., நீளத்திற்கும் அதிகமாக இந்த மீன் வளராது. வெயில் படும் வகையிலான தொட்டிகளில் இந்த மீன் வைக்க கூடாது. 500 லிட்டருக்கும் அதிகமாக உள்ள நீர் தொட்டியில் மீன் வளர்க்கவேண்டும். மீன் வள ரும் இடத்தில் அபேட், குளோ ரின் உள்ளிட்ட எந்த கிருமி நாசினி பவுடரும் பயன்படுத்த கூடாது. குடிநீர் தொட்டியை சாதாரண முறையில் சுத்தம் செய்தால் போதும். மீன் தொட்டியில் இருந்தால் கொசு வின் முட்டை, லார்வா என்ற இளம்பருவ புழுக்களை அழி த்து விடும். குறிப்பாக மலேரி யா, சிக்குன் குனியா, டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை இந்த கம்பூசியா மீன் உயிரோடு வாழ முடியாது. இதனை மேட் டூர் அணை, மீன் வளர்ப்பு துறையிடமிருந்து ஆயிரம் மீன் 50 ரூபாய் என விலை கொடுத்த சுகாதார துறையி னர் வாங்கி வந்துள்ளனர். இந்த மீன் சாப்பிட ஏற்றதல்ல.