Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமலர் 04.06.2010

திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு

திருச்சி: பொதுமக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக்கொள்ள நகராட்சி சார்பில் நகர்நல மையங்களுக்கு 16 .சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் 25 நகர்நல மையங்கள், 18 டிஸ்பென்ஸரிகள் உள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரம், பிரசவம், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு நகர்நல மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், இதயம் பலவீனமாக உள்ளதா? என்பதை கண்டறிய தேவையான இ.சி.ஜி., இயந்திரம் இல்லை. வளர்ந்து வரும் நாகரீக உலகில் இதயம் சம்பந்தமான நோய் அதிகரித்துள்ளது. மனித இதயம் பலவீனமாக உள்ளதா? என்பதை கண்டறிய இ.சி.ஜி., இயந்திரம் பயன்படுகிறது. சாதாரணமாக இ.சி.ஜி., மூலம் இதயம் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளில் அதிகம் செலவாகும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக் கொள்ள திருச்சி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில், 70 ஆயிரம் மதிப்புள்ள 16 .சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. 16 மயங்களுக்கு இ.சி.ஜி., இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. விரைவில் நகர்நல மையங்களுக்கு இ.சி.ஜி., இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.