Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை ... காலரா போன்ற பாதிப்புக்களை தடுக்க நட

Print PDF

தினமலர் 04.06.2010

சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை ... காலரா போன்ற பாதிப்புக்களை தடுக்க நட

தேனி: சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்ற மாதம் மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காலரா பரவியது. தற் போது வரை காலரா பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் சப்ளை குறைபாடு தான் என சுகாதாரத்துறை புகார் கூறி உள்ளது.

ஆற்றில் மணல் அள்ளுவதால் குடிநீர் திட்ட கிணறுகளில் ஊறும் நீரே மாசுபட்ட நிலையில் உள்ள இந்த நீரை முறையாக குளோரினேசன் செய்வதும் இல்லை. அப்படியே நீரை சப்ளை செய்வதே இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதற்கு காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் "சில்வர் அயோனைசேஷன்' என்ற கருவி பொறுத்தி நீரை சுத்திகரிப்பு செய்கின்றனர். குளோரின் செய்தால் கூட குடிநீரில் உள்ள குளோரின் அளவினை கண்டறிய முடியும்.

சில்வர் அயோனைசேஷனில் அந்த நம்பகத்தன்மையும் இல்லை.குடிநீர் திட்டங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது மட்டுமே பாதுகாப் பான குடிநீர் வழங்க ஒரே வழி. எனவே அத்தனை திட்டங்களிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

பைப் லைன்களை உடைத்து குடிநீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளம் தோண்டி குடிநீர் பிடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தரவை முறையாக செயல்படுத்துவதன் மூலம் குடிநீர் மாசுபடுவதை தடுப்பதுடன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். இதற்கு குடிநீர் வடிகால்வாரியம், உள்ளாட்சி அமைப்புக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.