Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈ, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவக்கம்!

Print PDF

தினமணி   04.06.2010

, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவக்கம்!

கோவை, ஜூன் 3: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார ஊரகப் பகுதிகளில் ஈ, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி ஓரிரு நாள்களில் துவங்குகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்க நாளின்போது சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து திட்டம் தயாரித்து செயலாற்றி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார் கூறியது:

கொசு ஒழிப்புப் பணி: செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப் பகுதிகள் 4 மண்டலங்களாகப்

பிரிகிகப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 225 ஊழியர்களும், பொது சுகாதாரத் துறையில் இருந்து 75 பேரும் இப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுக்களை அதன் லார்வா நிலையிலேயே அழிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூச்சியியல் நிபுணர்கள் 6 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் இப் பணியைக் கண்காணித்து வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் கொசுக்கள் உற்பத்தியாகும் அடர்த்தி விகிதம் கணக்கிடப்பட்டு, கொசுப் புழுக்களை அழிக்கும் பணி நடைபெறுகிறது.

ஈக்களைக் கட்டுப்படுத்த ஸ்பிரே: ஈக்களைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி ஓரிரு நாள்களில் துவங்குகிறது. செம்மொழி மாநாட்டுக்காக 25 ஸ்பிரேயர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஈ, கொசுக்களை அழிக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படும். ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சீதோஷண நிலையில் ஈ, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அதேபோல அதிகம்பேர் கூடும் இடங்கள், உணவு வழங்கும் பகுதிகளில் ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும். இப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீர் விநியோகம்: கோவை மாநகரப் பகுதியைப் பொருத்தவரை சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையங்களிலேயே குளோரினேற்றம் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், ஊர்வலப் பாதை ஆகிய இடங்களில் தாற்காலிகத் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த தொட்டிகளில் அவ்வப்போது குளோரின் அளவு சோதனையிடப்பட்டு தேவைப்படும்பட்சத்தில் குளோரின் கலக்கப்படும்.

மருத்துவக் குழுக்கள்: மாநாட்டையொட்டி தாற்காலிக மருத்துவமனைகளைத் தவிர 9 மருத்துவக் குழுக்கள் அûமைக்கப்படுகின்றன. ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுடன் மாநாட்டையொட்டி அமைக்கப்படும் தாற்காலிக பஸ் நிலையங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் இம் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படும் என்றார்.