Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

Print PDF

தினகரன் 04.06.2010

300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

பழநி, ஜூன் 4: பழநியில் 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பழநி நகராட்சி பகுதியில் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் கடைகள், ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நகர்மன்ற அலுவலர் பர்வீன்பானு தலைமையில் ஆணையர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று சோதனை நடத்தினர். பழநி அடிவாரம், புது தாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு, தேரடி பூங்கா தெரு, காந்தி ரோடு, மார்க்கெட் போன்ற பகுதிகளில் வியாபாரிகளிடம் இருந்து 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர் கூறுகையில், "எருமை பாலில் அதிகமாக தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. துருபிடித்த கேன்களில் சுகாதாரமற்ற முறையில் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். பழநி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பால் வியாபாரம் செய்கின்றனர். உரிமம் பெறாத வியாபாரிகள் ஒரு வார காலத்திற்குள் நகராட்சியில் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 98437&54133 என்ற செல்போனில் புகார் தெரிவிக்கலாம்Ó என்றார்