Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகர துப்புரவு பணியில் ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் சாலை இனி ‘பளிச்’ ஆகும்

Print PDF

தினகரன் 08.06.2010

மாநகர துப்புரவு பணியில் ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் சாலை இனி பளிச்ஆகும்

கோவை, ஜூன் 8: கோவை மாநகராட்சியில் மாநாடு பணிக்காக 3 ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் வந்துள்ளன.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. புனாவிலிருந்து 3 ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் நேற்று பெறப்பட்டது. 5 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு ரோடு ஸ்வீப்பர் வாகனமும், 6.5 டன் கொள்ளளவு கொண்ட ஒரு ரோடு ஸ்வீப்பர் வாகனமும் வாங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 1.20 கோடி ரூபாய்.

கோவை நகரில் உள்ள ரோடு, பொது இடம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், மைதானம் போன்றவற்றை ரோடு ஸ்வீப்பர் வாகனம் மூலம் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாகனமும் தினமும் 40 கி.மீ தூரம் ஓட்ட முடியும். ஒரு மணி நேரத்திற்கு 9 கி.மீ தூரம் வரை இயக்க முடியும். 3 மீட்டர் அகலத்திற்கு ரோடு முழுவதையும் சுத்தம் செய்து விடும். சுமார் 5 கிலோ எடை கொண்ட பொருளை கூட எளிதாக எடுத்து விடும். ரோட்டில் வாகனத்தை இயக்கினால் கல், மண், மணல், பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து உறிஞ்சி எடுத்து விடும். குப்பைகளை சேகரிக்க வாகனத்தில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வீப்பர் மூலம் நீரை தெளித்து ரோடு, பொது இடத்தை சுத்தம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த வாகனம் மூலம் கோவை நகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்கள் தினமும் செய்யும் பணியை இந்த வாகனமும் ஒரே நாளில் செய்து விடும்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாகனத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அருணா, மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு சுகாதார பணிகளுக்காக பிரசுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நவீன குப்பை கூட்டும் கருவிகள், ஒட்டடை அடிக்கும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.