Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 10.06.2010

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 9: விருதுநகரில் உள்ள பலசரக்குக் கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள், காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் விருதுநகரில் நடத்தப்பட்ட சோதனையில் பல கடைகளிலிருந்து ஏராளமான காலாவதியான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சோதனையின் போது பலர் கடைகளை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அவ்வாறு பூட்டப்பட்ட கடைகளை நகராட்சி ஊழியர்கள் சோதனையிட்டனர்.

சுகாதார ஆய்வாளர்கள் மோகன்குமார், வெங்கடேஷ்வரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

மெயின் பஜாரில் உள்ள பலசரக்குக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் காலாவதியான நெய், மைதா, டீத்தூள், உப்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இரு ஹோட்டல்களில் இருந்த கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது: காலாவதியான பொருள்கள் நகரின் பல கடைகளில் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து தினசரி தகவல்கள் வருகின்றன. நகரில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.

உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள், சுவைக்கான கெமிக்கல்கள் மற்றும் நாட்கள் கடந்த மாமிச உணவுகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.