Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல்லில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை, காலாவதி பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 15.06.2010

நாமக்கல்லில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை, காலாவதி பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 14:நாமக்கல் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை மற்றும் காலாவதி பொருட்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

÷தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்கவும், காலாவதிப் பொருட்களை தடை செய்யும் வகையில் ஆட்சியர் சகாயம் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நாமக்கல்லில் சோதனையில் ஈடுபட்டனர்.

÷ இதேபோல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் என அனைத்துப் பகுதிகளிலும் அநதந்தப் பகுதி வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், பரமத்தி வேலூர் பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலும், நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் மதிப்பிலும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

÷ நாமக்கல்லில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. தகவலறிந்து வடமாநில வியாபாரிகள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ÷வணிகர் சங்க நிர்வாகிகளும் வந்து மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடையேதுமில்லை என வியாபாரிகள் கூறினர்.

÷ தடையாணை இல்லை என்ற அரசு உத்தரவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து விளக்கம் பெற்று வந்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் வழங்குவதாக து. ரவீந்திரன் கூறினார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தின் ஒரு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டப்பட்டது.

ஒரே நாளில் ரூ. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.