Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் ஓட்டல்களில் ஆய்வு பரிசோதனைக்கு உணவுபொருள் சேகரிப்பு

Print PDF

தினகரன் 16.06.2010

பெரம்பலூர் ஓட்டல்களில் ஆய்வு பரிசோதனைக்கு உணவுபொருள் சேகரிப்பு

பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூரில் உள்ள ஓட்டல், கடைகளில் நடந்த ஆய்வில் உணவுப்பொருள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் சோதனையில் முறைகேடு கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் விஜயக்குமார் தெரிவித்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 42 ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் கலெக்டர் விஜயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஓட்டல், கடைகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்யப்பட்டது. உரிமம் இல்லாமல் ஓட்டல் நடத்தி வந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டல், மற்றும் கடைகளை சுத்தமாக பராமரிக்கவும், தண்ணீர் உறிஞ்சாதப்படி சிமென்ட் பூச்சு உள்ள தரையை அமை க்கவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு ஒருவார அவகா சம் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், வர்த் தக நிறுவனம் நடத்துபவர் கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். திண்பண்டங்கள் தூசுபடாமலும், ஈ மொய்க்காமலும் பாதுகாப்பான முறையில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்க வேண்டும். ஓட்டல்களில் அனுமதியின்றி பார் நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டலின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த டீத்தூள், செயற்கை உணவு கலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு செய்தவதற்காக கோவை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்படும். அதில் தரமற்றது, கலப்படம், காலாவதி பொருள் என புள்ளி விபரங்கள் கூறப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை வீடு, பண்ணை, ஓட்டல், டீக்கடை மற்றும் சாலையோர டிபன் சென்டர், இதர நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்துபவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.