Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைப்பு கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன் 17.06.2010

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைப்பு கமிஷனர் தகவல்

நெல்லை, ஜூன் 17: நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் கொசுக் கள் உருவாவதை தடுக்கவும், நோய்கள் பரவுவதை தடுக்கவும், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் 79 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கொசு உற்பத்தியை தடுக்க அபேட் மருந்து கலக்கப்பட்ட நீர் கலவையை வீடுகளிலுள்ள நீர்தேக்க தொட்டிகளில் ஊற்றுவர்.

குடிநீரில் பயன்படுத்தும் இம்மருந்து தீங்கற்றதாகும். எனவே பொதுமக்கள் சுகாதார குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கேட்டு கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீர்தேங்கும் வகையில் உள்ள காலி தண் ணீர் பாட்டில்கள், இளநீர் கூந்தல்கள், சிரட்டைகள், பழைய உரல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை காலி செய்து சுத்தமாக கழுவி உலரவிட வேண்டும். வெளியூர் செல்லும் காலங்களில் குடிநீர் தொட்டிகளை காலியாக விட்டு செல்ல வேண்டும்.

செப்டிக் டாங்க் காற்று போக்கி குழாயில் கொசு புகாவண்ணம் கொசுவலை அல்லது கித்தான் சாக்கு கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்படாத குழாய்களில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ரூ.10 வசூலித்து கொசு புகாவண்ணம் கொசு வலை கட்டுவர். வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய் கிருமிகள் பரவ உதவும் ஈக்களை ஒழிக்க பொதுமக்களும், உணவு பண்டங்கள் தயாரிப்போரும் உதவ வேண் டும். சிற்றுண்டி சாலைகள், தேநீர் கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவு பொருட்களை ஈ மொய்க்காத வண்ணம் சூடாக விற்பனை செய்ய வேண்டும்.

உணவகங்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும். பழைய உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது. சுகாதாரமற்ற உணவு, ஈ மொய்க் கும் பண்டங்களை விற்பனை செய்பவர்கள், சுத்தமான காய்ச்சிய குடிநீர் வழங்காத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணிகள் குறித்த விபரங்களுக்கு நெல்லை மாநகராட்சியின் தொலைபேசி எண் 2336633 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 4656 கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.