Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மலேரியாவை கட்டுப்படுத்த ரயில்வேயிடம் உதவி கோருகிறது மாநகராட்சி

Print PDF

தினகரன் 30.06.2010

மலேரியாவை கட்டுப்படுத்த ரயில்வேயிடம் உதவி கோருகிறது மாநகராட்சி

மும்பை, ஜூன் 30: மும்பை யில் மலேரியாவை கட்டுப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் ரயில்வேயின் உதவியை நாடியுள்ளது.

மும்பையில் தற்போது மலேரியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெரும் இடங்களில் அதிக அளவு இந்த காய்ச்சல் பரவுவதாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வேக்கு சொந்தமான 1050 இடங்களில் மலேரியா ஒழிப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் முதல்கட்டமாக மத்திய ரயில்வே அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள் ளனர்.

மத்திய ரயில்வேயில் 518 இடங்கள் மலேரியா அதிகம் உள்ள பகுதியாக கண்டறி யப்பட்டுள்ளது. இதில் குர்லாவில் 106 இடங்களும், சயான் மற்றும் மாட்டுங்கா வில் 208 இடங்களும் பரேலில் 208 இடங்களும் அடையாளம் காணப்பட் டுள்ளது. மேற்கு ரயில்வே யில் தாதர், அந்தேரி கிழக்கு மற்றும் தாராவியில் அதிக மான இடங்கள் இருக் கிறது.

இது தொடர்பாக மேற்கு ரயில்வே அதிகாரிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி கள் முடிவு செய்துள் ளனர்.