Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிபள்ளிகளில்சுகாதாரவிழிப்புணர்வு திண்டிவனம் நகர்மன்றம் முடிவு

Print PDF

தினகரன் 30.06.2010

நகராட்சிபள்ளிகளில்சுகாதாரவிழிப்புணர்வு திண்டிவனம் நகர்மன்றம் முடிவு

திண்டிவனம், ஜூன் 30: திண்டிவனம் நகராட்சி பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நகர்மன்றம் முடிவு செய்துள்ளது.

திண்டிவனம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் பூபாலன் தலைமை வகித் தார். ஆணையர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் காவேரிப்பாக்கம் மற்றும் காமாட்சியம்மன் கோவில் தெருவில் ரயில்வே சுரங்கப்பாதை இணைப்பு சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இப் பணியை ரத்து செய்து ஒப்பந்ததாரரை நீக்கி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை களைய திருவள்ளுவர் நகர், டி.எம்.ஜி. நகர், உதய நகர், கோபாலபுரம், வீராங்குளம், தென்றல் நகர், பூதேரி ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் சிறு மின்விசை பம்பு அமைக்க தீர்மானம் நிறைவேறியது.

பூதேரி ராஜன் நகரில் புதிய திறந்த வெளி கிணறு அமைப்பது, நகராட்சியில் உள்ள மகப்பேறு மையங்களின் கட்டடங்களில் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் கூடுதல் அறைகள் கட்ட அனுமதி அளிப்பது, செஞ்சி சாலையில் சாலையோர நிழற்குடை அமைக்கும் பணியை ரத்து செய்து, மாற்றுப் பணியாக திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைப்படி 11வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவுக்கு சிமெண்ட் சாலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் தொழில்களுக்கு தொழிலின் தன்மை, பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிமைக் கட்டணத்தை திருத்தி மறு நிர்ணயம் செய்வது, மூன்றா வது வார்டில் குடிநீர் குழாயை பழுது பார்ப்பது என தீர்மானங்கள் நிறை வேறின. நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திடீர் ஆய்வு நடத்தவும் வாய்மொழியாக நகர மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் வைத்தனர். அனைவரும் இத்தீர்மானத்தை ஆமோதித்ததால் நகர் மன்ற தலைவர் பூபாலன் நிறைவேற்றினார்.