Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மாலை நேரத்திலும் செயல்படும்

Print PDF

தினகரன் 22.07.2010

மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மாலை நேரத்திலும் செயல்படும்

மும்பை, ஜூலை 22: மழைக் காலத்தையொட்டி பரவி வரும் நோய்களை கட்டுப் படுத்துவதற்காக மருத்துவ மனைகளின் புற நோயாளி கள் பிரிவை(.பி.டி.) மாலை நேரமும் திறந்து வைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், பல்வேறு நோய்களும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மலேரியா, லெப் டோ, டெங்கு, டைப்பாய்டு, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிக மாக காணப்படுகிறது.

இந்நோய்களால் பாதிக் கப்பட்ட ஆயிரக்கணக் கானோர் நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் உள்ள மாநக ராட்சி மருத்துவமனை களுக்கு புற நோயாளிகளாக வருபவர்களின் எண்ணிக் கையும் கடந்த சில நாட்க ளில் கணிசமாக அதிகரித் துள்ளது. ஆனால் பகல் 12 மணி வரை மட்டுமே மாநகராட்சி மருத்துவ மனைகளில் புற நோயாளி கள் பிரிவு செயல்படும் என் பதால், பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு மாலை நேரத்தி லும் புற நோயாளிகள் பிரிவை திறந்து வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி நிர் வாகம் முடிவு செய்துள் ளது.நகரில் பரவி வரும் மழைக்கால நோய்கள் தொ டர்பான பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக மாநகராட்சி பொதுக் குழுவின் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் நோய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை களை எடுக்க தவறி விட்ட தாக எதிர்க்கட்சி உறுப் பினர்கள் குற்றம்சாட்டினர். நோய்களை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களில் மாநகராட்சி நிர் வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய மாந கராட்சி கூடுதல் கமிஷனர் மனீஷா மாய்ஸ்கர் கூறுகை யில், "நோய் பரவலை கட்டுப் படுத்துவதற்காக மாநகராட்சி மருத்துவ மனைகளில் புற நோயாளி கள் பிரிவை மாலை நேரத்தி லும் திறந்து வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது" என் றார்.

அவர் மேலும் கூறியதாவது;

மாநகராட்சி நிர்வாகத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பெரிய மருத்துவ மனைகளிலும் 16 சாதாரண மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் பிரிவு இனி மாலை நேரத்திலும் செயல் படும். மழைக்கால நோய் களை கட்டுப்படுத்த மாநக ராட்சி தேவையான நடவ டிக்கைகளை எடுத்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மழைக் கால நோய்களால் பாதிக்கப் பட்டு இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் தாங்கள் குடி யிருந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். நோய் தீவிரமடைந்த பிறகே இவர் கள் மாநகராட்சி மருத்து வமனைக்கு கொண்டு வரப் பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.