Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்: கமிஷனர் தகவல்

Print PDF

தினமணி 30.07.2010

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்: கமிஷனர் தகவல்

மதுரை, ஜூலை 29: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 32 இடங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம்கள் சனிக்கிழமை முதல் (ஜூலை 31) நடைபெற உள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், மதுரை மாநகராட்சி மக்கள் பயன்படும் வகையில் 31.7.2010 முதல் 23.11.2010 வரை அனைத்து மகப்பேறு மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள், மருந்தகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 32 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை தேவைப்படின், அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ள அரசு நிர்ணயித்துள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.இருதயம் மற்றும் இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், முடநீக்கி அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை, ரத்தக் குழாய்க்கான அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கர்ப்பப் பை நோய்கள், நெஞ்சக நோய்கள், ரத்த நோய்கள் மற்றும் இதர நோய்கள் உள்பட 51 வகையான நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக, வரும் சனிக்கிழமை செüராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆகஸ்ட் 3-ல் கோ.புதூர் மகப்பேறு மருத்துவமனையிலும், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.