Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவிலில் வீடு, வீடாக சுகாதாரத்துறை ஆய்வு தண்ணீரில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தெளிப்பு

Print PDF

தினகரன் 30.07.2010

நாகர்கோவிலில் வீடு, வீடாக சுகாதாரத்துறை ஆய்வு தண்ணீரில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தெளிப்பு

நாகர்கோவில், ஜூலை 30: நாகர்கோவில் நகர பகுதிகளில் கொசு புழுக்களை ஒழிக்கும் வகையில் வீடு, வீடாக சுகாதார பணியாளர் கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 8 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து கொசு புழுக்களை ஒழிக்கும் பணிகள் மாவட்டம் முழு வதும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பள்ளிகள், விடுதிகளில் சுகாதாரத்துறை துணை இயக்கு னர் மதுசூத னன் தலைமை யில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்டவர்களி டம் இருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின் றன. கொசு ஒழிப்பு மருந்துகளும் ஆங்காங்கே தெளிக்கப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில், குழித் துறை, குளச்சல், பத்மநாபபுரம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கொசுக்களை ஒழிப்பதில் பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். நாகர்கோவில் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் டாக்டர் கள் காவேரி, கலைச்செல்வி, உமாராணி தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் கள், செவிலியர்கள், சுகா தார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ள னர்.

வீடுகளில் சிரட்டை, சிமென்ட் தொட்டிகள், முட்டை தோடு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் தண்ணீரை மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டி, உடைந்த பொருட்களில் தேங்கி இருந்த தண்ணீரில் உற்பத்தியாகி இருந்த கொசு புழுக்களை அழித்தனர். நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை சுகாதார துணை இயக்குனர் மதுசூதனன் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் ஜானகி, நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் கூறியதாவது: மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுக்களை பரப்பும் ஏ.டி.எஸ். கொசு வகைகள் சாக்கடை நீரில் உருவாகுவதில்லை. சாக் கடை நீரில் உருவாகும் கொசு புழுக்கள் நோய் பரப்புவதில்லை. வீடுகளில் சுற்றப்புறங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண் டும். மழைக்காலம் என்பதால் அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்பு உண்டு. இந்த வகை கொசு புழுக்கள் நல்ல நீரில் உற்பத்தியாகி முட்டையிடுவதால் மேலும், மேலும் நோய் பரவும் அபாயம் ஏற் படும். இதை தவிர்க்கும் வகையில் வீடு, வீடாக நக ராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள். பொதுமக்களும் இந்த பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.