Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அழுக்கு நகரம் மும்பை ஆய்வில் தகவல்

Print PDF

தினகரன் 09.08.2010

அழுக்கு நகரம் மும்பை ஆய்வில் தகவல்

மும்பை, ஆக. 9: இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மும்பை நகரம்தான் மிகவும் அழுக்கான நகரமாக விளங்குவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இந்த வரிசையில் சென்னை 13வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் முறையாக அரசு இந்திய நகரங்களின் தூய்மை குறித்து, தேசிய நகர சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் (என்யுஎஸ்பி) கீழ் ஆய்வு செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

சுகாதாரம், தூய்மை, உடல்நல மேம்பாட்டுக்கு உரிய ஏற்பாடுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 423 நகரங்கள் பட்டியல் இடப்பட்டன. அதில் மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பை நகரம் குறைந்த 46 இடத்தில் உள்ளது. கான்பூர் மற்றும் குண்டூர் நகரங்கள் மும்பையை விட மேலே உள்ளன. மகாராஷ்டிராவின் நவி மும்பை 11 இடத்தை பிடித்தது.

இந்திய நகர்புற மக்கள் 72 சதவீதம் பேர் மட்டுமே கழிப்பறையை பயன்படுத்துவது தெரியவந்தது. சாக்கடை நீர், கழிவு நீர் ஆகியவற்றை மனிதர்களே அகற்றுகின்றனர்.

தூய்மையை அடிப்படையாக வைத்து நகரங்களுக்கு 100 சதவீத மதிப்பெண் மற்றும் பச்சை, நீலம், கருப்பு, சிகப்பு என்ற நிறங்களாலும் வகைப்படுத்தப்பட்டன. இதில் மும்பைக்கு 45 புள்ளிகள் மற்றும் கருப்பு நிறமும் கிடைத்தது. டெல்லி 61 புள்ளியுடன் 5வது இடமும், சென்னை 13, கொல்கத்தா 25வது இடமும் பிடித்தன.

இதை தொடர்ந்து 4 நகரங்கள் நீலம் நிறமும், 230 நகரங்கள் கருப்பு நிறமும், 189 நகரங்கள் சிகப்பு நிற தரத்தையும் பெற்றன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் தூய்மையின்மை காரணமாக நகர மக்கள் உடல் சம்பந்தமான நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து வருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.