Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புறநகர் பகுதிகளில் கூடுதல் மருத்துவமனை தேவை மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

Print PDF

தினகரன் 09.08.2010

புறநகர் பகுதிகளில் கூடுதல் மருத்துவமனை தேவை மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

மும்பை, ஆக. 9: மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் நசீம்கான் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை புறநகர் பொறுப்பு அமைச்சர் நசீம் கான் நேற்று காட்கோபர் ராஜாவாடி மற்றும் போரி வலி பகவதி மருத்துவ மனையில் மலேரியா நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மாநக ராட்சி கூடுதல் கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் அதி காரிகளும் சென்றனர்.

பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியதாவது: புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் குறைந்தது 4 மருத்துவம னைகள் இங்கு தேவை. கிழக்கு புறநகர் பகுதிகளில் 2 மருத்துவமனை களும் மேற்கு புறநகர் பகுதிகளில் மேலும் 2 மருத்துவ மனைகளும் அமைக்கப்பட வேண்டும். இது தவிர தற்போதுள்ள மருத்துவ மனைகளை நவீனப்படுத்தி அவைகளை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். மலேரியா நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. இன்னும் 8 அல்லது 10 தினங்களில் நிலைமை மேலும் சீரடையும் என்று தெரிகிறது. மலேரியா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மலேரியாவை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மாநில அரசு தேவையன ஒத் துழைப்பை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

காட்கோபரில் உள்ள மிலிந்த் நகர் குடிசைப் பகுதிக்கும் சென்ற அமைச்சர் நசீம்கான், அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பதை யும் நேரில் ஆய்வு செய் தார்.