Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரம் அருகே 600 படுக்கைகள் கொண்ட மாநகராட்சி மருத்துவமனை; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 09.08.2010

தாம்பரம் அருகே 600 படுக்கைகள் கொண்ட மாநகராட்சி மருத்துவமனை; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

தாம்பரம், ஆக. 9- தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1946-ம் ஆண்டு அழகப்பா செட்டியார் சென்னை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலத்தை சென்னை மாநகர மேயர் மா.சுப் பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் 600 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இவற்றில் மகப்பேறு பிரிவுக்கு 200 படுக்கை வசதியும், தொற்று நோய் பிரிவுக்கு 200 படுக்கை வசதியும், பொது நோய் பிரிவுக்கு 200 படுக்கை வசதியும் வழங்கப்படும்.

இந்த மருத்துவமனை கட்ட ரூ. 30 முதல் ரூ. 40 கோடி வரை செலவாகும். அந்த நிதியை மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து பெற்று இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணி தொடங்கப்படும்.

இங்கு நிறைய மரங்கள் உள்ளன. அவற்றை வெட்டாமல் மருத்துவமனை கட்டப்படும். இந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவர் பழு தடைந்தும், கேட் இன்றியும் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பும் உள்ளது. அதிகாரிகள் இவற்றை விரைவில் சீரமைப்பார்கள் என்றார்.