Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாடம்பாக்கத்தில் க்ஷீ30 கோடியில் அமைப்பு 200 படுக்கை வசதியுடன் தொற்றுநோய் மருத்துவமனை

Print PDF

தினகரன் 10.08.2010

மாடம்பாக்கத்தில் க்ஷீ30 கோடியில் அமைப்பு 200 படுக்கை வசதியுடன் தொற்றுநோய் மருத்துவமனை

தாம்பரம், ஆக. 10: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 33 ஏக்கர் பரப்பளவிலான காலி இடத்தை 1947ம் ஆண்டு ஆர்.எம்.அழகப்ப செட்டியார், சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். ‘மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே இடத்தை பயன்படுத்த வேண்டும்என்று அப்போது கூறியிருந்தார். அந்த இடம் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்னை மாநகராட்சி சார்பில்

க்ஷீ34.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. ஆர்.எம்.அழகப்ப செட்டியார் கூறியது போல மருத்துவமனை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அந்த இடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டையில் மட்டுமே உள்ளது. தென்சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் தொற்று நோயால் பாதித்தால் அங்குதான் செல்ல வேண்டும். எனவே இங்கு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அதன்படி

க்ஷீ30 கோடி செலவில் 200 படுக்கை வசதியுடன் கூடிய தொற்றுநோய் மருத்துவமனை பிரிவு, 200 படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனை பிரிவு, 200 படுக்கை வசதியுடன் கூடிய பொதுமருத்துவ பிரிவு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிதியிலிருந்து இந்தப்பணி நிறைவேற்றப்படும். இங்குள்ள இடத்தை சுத்தம் செய்து மரங்கள் பாதிக்காத வகையில் கட்டிடங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணி தொடங்கும். பூங்கா வசதி யும் அமைக்கப்படும்.

மும்பை மாநகராட்சி போன்று சென்னை மாநகராட்சியும் மருத்துவ கல்லூரி தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மேயர் கூறினார். துணை மேயர் சத்யபாமா, துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா, சுகாதார அலுவலர் குகானந்தன், கூடுதல் அலுவலர் தங்கராஜ், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) மணிவேல், 9&வது மண்டல அலுவலர் பிரேம்சந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 10 August 2010 06:34