Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் முதன்முறையாக அனுப்பானடியில் ஸ்4 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம்

Print PDF

தினகரன் 10.08.2010

தமிழகத்தில் முதன்முறையாக அனுப்பானடியில் ஸ்4 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம்

மதுரை, ஆக. 10: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அனுப்பானடியில் ணீ4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சி கூடம் திறக்கப்பட்டது.

மதுரை நகரில் இறைச்சி கடைகளுக்கு ஆடு அறுத்து கொடுக்கும் மாநகராட்சி ஆடு வதை கூடம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் பேட்டையில் இயங்கி வருகிறது. சுகாதார கேடு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இதனை அனுப்பானடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுப்பானடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ணீ4 கோடி மதிப்பில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாநகராட்சி நவீன ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டது.

சீனாவிலிருந¢து வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதனை மேயர் தேன்மொழி நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறுகையில், இங்கு மின்சார ஷாக் மூலம் ஆடுகளை மயக்க நிலைக்கு உள்ளாக்கி இறைச்சியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் ஒரு நாளைக்கு 1200 ஆடுகளை சுகாதாரமான முறையில் அறுக்க முடியும். மாநகராட்சி முத்திரையுள்ள இறைச்சி மட்டுமே கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். முத்திரையில்லாத இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். நெல்பேட்டை யிலுள்ள ஆடு வதை நிலையம் விரைவில் மூடப்படும்Ó என்றார்.

மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், நன்மாறன் எம்எல்ஏ மண்டல தலைவர் குருசாமி, சுகாதார குழுத்தலைவர் ராலியாபானு, கவுன்சிலர் காதர் அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேயர் திறந்து வைத்தார்