Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உணவு பண்டங்களில் தரக்குறைவு;வழக்கு தொடர மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 11.08.2010

உணவு பண்டங்களில் தரக்குறைவு;வழக்கு தொடர மாநகராட்சி முடிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப் படும் உணவு பண்டங்களின் மாதிரியை ஆய்வு செய்தனர். அவை தரக்குறைவுடனும், கலப்படம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடர, உணவுப் பொருள் கலப்பட தடுப்பு பிரிவு இணை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை, உணவுப்பொருள் கலப்படத் துறை ஆய்வாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உணவு பண்டங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தினர். சேகரிக் கப்பட்ட மாதிரிகளில், மூன்றில் ஒரு பங்கு உணவு பண்டங்களின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
மாநகராட்சி சுகாதாரப்பிரிவில், உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவில் கடந்த காலங்களில் போதிய ஆட்கள் இல்லை. இதனால், தொடர் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. மாநகராட்சியில் பல்வேறு பகுதி களில் தரமற்ற, கலப்படத்துடன் கூடிய உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கலப்பட தடுப்பு பிரிவை மேம்படுத்தி, ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. நடப்பாண்டில் ஏப்., முதல் இதுவரை 77 ஆய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பால், துவரம் பருப்பு, மிக்சர், குலோப் ஜாமூன், உளுந்தம் பருப்பு, சன் பிளவர் ஆயில், கோதுமை ரவை, கோதுமை, டீத்தூள், மிளகாய்த் தூள், நெய், நல்லெண்ணெய், ரஸ்க், வெண்ணை, சாக்லெட், அப்பளம், மஞ்சள் தூள், காபி பொடி, தக்காளி சாஸ், மைதா மாவு, கடலைப்பருப்பு, தேங்காய் எண்ணெய், கொத்து மல்லி, சர்க்கரை, குளிர்பானங்கள், பிஸ்கட், வடகம், தயிர் போன்ற 77 உணவு மாதிரிகள் பல்வேறு கடை களில் இருந்து சேகரிக்கப்பட்டன. இவற்றில் 25 மாதிரிகள் தரமற்றவை யாகவும், கலப்படம் செய்திருந்ததும் கண்டறியப்பட்டது. சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகர் நல அலுவலர் ஜவஹர்லால் கூறியதாவது:தரமற்ற, கலப்பட உணவு பொருள் விற்பனையை தடுப்பது குறித்து மேயர் மற்றும் கமிஷனர் அறிவுறுத்தினர். போதிய ஆய்வாளர் கள் நியமிக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒரு உணவு பொருளுக்கு மூன்று மாதிரிகள் எடுக்கப்படும். அவை, மாதிரி தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இரண்டு மாதிரிகள், "சீல்' உடைக்காமல் பாதுகாக்கப்படும். கடந்த ஏப்ரலுக்கு பின், 77 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் 25 மாதிரிகள் தரக்குறைவானவை என உறுதியாகி உள்ளது. கலப்படம் என்றால், வேறு பொருட்களை கலக்குவது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உதாரணமாக, எண்ணெய் வகைகளில் சில மூலக்கூறுகள் இந்த அளவில் இருக்க வேண்டும் என்ற அளவீடு உள்ளது. ஹைட்ரோ ஜெனிக், அயோடின் உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்படும்.இவற்றில் வரையறுக்கப்பட்ட அளவை விட, அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது தரமற்ற உணவு பொருள். தயிரில் குறிப்பிட்ட அளவை விட, கொழுப்பு அதிகமாக இருக்க, பவுடர் சேர்த்திருப்பர்; அது, கலப்படம். அதுபோன்ற பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம்.அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சென்னை உணவு பொருள் கலப்பட தடுப்பு பிரிவு இணை இயக்குனருக்கு பரிந்துரைக் கப்படும். அங்கிருந்து ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.

வழக்கு தொடரும் முன், சம்பந்தப் பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும். அவர்கள், இம்மாதிரியின் ஆய்வு முடிவை மறுத்தால், மற்றொரு மாதிரியை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, தரமற்ற பொருள் அல்லது கலப்பட பொருள் என்பது மீண்டும் உறுதி செய்யப்படும்.பின், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். தற்போது 20 வழக்குகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே 60 வழக்குகள் நிலுவை யில் உள்ளன. தற்போது 25 வழக்குகள் தொடர, துறைக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க, கோவை அரசு உதவி வக்கீலிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, ஜவஹர்லால் கூறினார்.