Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம்பெண்களுக்கு புது திட்டம்: அறிவித்தார் மேயர்

Print PDF

தினமலர் 13.08.2010

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம்பெண்களுக்கு புது திட்டம்: அறிவித்தார் மேயர்

திருவான்மியூர் : ""மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பத்திய, சத்துணவு வழங்கும் புது திட்டம் அண்ணா பிறந்த நாள் முதல் துவக்கப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் அறிவித்தார்.மாநகராட்சிக்கு உட்பட்ட 155வது வார்டு பகுதியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா, திருவான்மியூர், சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.தாம்பரம் எம்.எல்.., ராஜா முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஜோதி நிர்மலா தலைமை தாங்கினார்.

இலவச கலர் "டிவி'க்களை வழங்கிய மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:சென்னையைப் பொறுத்தவரை ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 608 பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 155 வட்டத்தில், 13 ஆயிரத்து 168 கலர் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பத்திய, சத்துணவு வழங்கும் புது திட்டம், வரும் அண்ணா பிறந்த நாள் முதல் துவக்கப்படுகிறது. அதற்கான உணவுகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கவுள்ளனர்.இவ்வாறு மேயர் பேசினார்.விழாவில் துணை மேயர் சத்யபாமா, 10வது மண்டலக் குழுத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.