Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு "சீல்' வைக்க முயற்சி:நெல்லை மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம்

Print PDF

தினமலர் 13.08.2010

ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு "சீல்' வைக்க முயற்சி:நெல்லை மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம்

திருநெல்வேலி:நெல்லையில் ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு மீண்டும் "சீல்' வைக்க சென்ற மாநகராட்சி அலுவலர்களுக்கும், குடோன் உரிமையாளர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் நடுத்தெருவில் ஸ்வீட் ஸ்டால் குடோன் உள்ளது. இங்கு அல்வா, கேக், ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. குடோன் சுகாதாரக்கேடாக இருப்பதாக கூறி மாநகராட்சி சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ம்தேதி தடையாணை பிறப்பித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதே மாதம் 17ம்தேதி குடோனுக்கு தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் சுல்தானா உள்ளிட்ட அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட குடோனில் ஊழியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சீலை அகற்றி ஊழியர்களை விடுவித்தனர். குடோனில் சரக்குகள் தயாரிக்கப்படும் இடத்திற்கு செல்லும் பாதையில் இருந்த கதவை மூடி மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலர்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது சீல் அகற்றப்பட்டு சரக்கு தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து உதவி கமிஷனர் சுல்தானா நெல்லை ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார்."சீல்' வைக்க முயற்சி:உதவி கமிஷனர் சுல்தானா, உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், கலியனாண்டி, சுகாதார ஆய்வாளர் அரசக்குமார், வி..., கிராம உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் குடோனுக்கு மீண்டும் சீல் வைக்க சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடோன் உரிமையாளர் தரப்பை சேர்ந்த குத்புதீன், .மு.மு.., நிர்வாகிகள் உஸ்மான்கான், மைதீன்பாரூக், ரசூல்மைதீன் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் இரு தரப்பும் செயல்படக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். இரு தரப்பும் அங்கிருந்து சென்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் போராடியும் குடோனுக்கு சீல் வைக்க முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் திரும்பினர்.இதுதொடர்பாக உதவி கமிஷனர் சுல்தானா நெல்லை ஜங்ஷன் போலீசில் புகார் அளித்துள்ளார்