Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சூடான சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு இலவசம் என்னென்ன உணவு வகைகள்?

Print PDF

தினகரன் 13.08.2010

சூடான சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு இலவசம் என்னென்ன உணவு வகைகள்?

சென்னை, ஆக.13: மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு, 5 நாட்களுக்கு தரமான பொருட்களில் தயாரிக்கப்பட்ட சிறப்பு சத்துணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி, மாவட்ட குடும்ப நலத்துறையின் மூலம் மாநகரில் வாழும் சுமார் 52 லட்சம் மக்களில் 50 சதவிகிதம் பேருக்கு தாய்சேய் நல மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. சென்னையில் 93 நகர நலவாழ்வு மையங்கள், 11 மகப்பேறு மருத்துவமனைகள், 24 மணி நேர மருத்துவமனை 2 ஆகியவை மூலம் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இது தவிர 8 மண்டலங்களில் குறுகிய கால 24 மணி நேர அவசர மருத்துவமனை அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் சிக்கலான பிரசவம் (சிசேரியன் மூலம்) மேற்கொள்ளப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை காட்டிலும், அதிக அளவில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் நலிவுற்ற ஏழை, எளியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியின் 24 மணி நேர மருத்துவமனைகளில் வருடத்தில் சுமார் 16 ஆயிரம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 5 ஆயிரம் பிரசவங்கள் சிசேரியன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஏழை பெண்களுக்கு சாதாரணமாகப் பிரசவம் என்றால் 3 நாட்கள், சிசேரியன் என்றால் 5 நாட்கள் மருத்துவமனையிலேயே மூன்று வேளையும் சிறப்பு சத்துணவு வழங்கப்படும். இது பிரசவித்த பெண்களிடம் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க உதவும் என்று மாநகராட்சி இந்த திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்த, சிறப்பு சத்துணவு தயாரித்து கொடுக்க, தனியாரிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கோருபவர்கள் ஓட்டல், கேன்டீன் தொழிலில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு உணவு சப்ளை செய்த அனுபவமும் வேண்டும் என்று நிபந்னை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம் என்றும் அவர்களுக்கு நிபந்தனைகளில் இருந்து சில விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த இலவச சிறப்பு சத்துணவு வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று திருவான்மியூரில் நேற்று நடந்த இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சுகப் பிரசவம்:

காலை டிபன்:

3 இட்லி (தலா 100 கிராம்) அல்லது அரிசி பொங்கல் (300 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார். இதுதவிர 200 மி.லி. காய்ச்சியப் ஆவீன் பால்.

மதிய சாப்பாடு:

அரிசி சாதம் (300 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார், 200 கிராம் ரசம், கூட்டு அல்லது பொரியல் (200 கிராம்).

மாலை உணவு: ஒரு வாழைப்பழம் அல்லது 50 கிராம் சுண்டல்.

இரவு உணவு: 3 இட்லி (தலா 100 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார். 200 மி.லி. காய்ச்சிய பால். இந்த சிறப்பு சத்துணவு, சுகப்பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு 3 நாட்களுக்கு மருத்துவமனையில் வழங்கப்படும்.

21,000 பேருக்கு காப்பர்& 1397904493 2006&2007ல் 13,629, 2007&2008ல் 14,300, 2008&2009ல் 14,359 பேருக்கும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சுகப் பிரசவம் மற்றும் சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 2006&2007ல் 11,732, 2007&2008ல் 12,433, 2008&2009ல் 12,121 பெண்களுக்கும் குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2006&2007ல் 21,499, 2007&2008ல் 21,944, 2008&2009ல் 21,775 பெண்களும் காப்பர்& 1397904493 அணிந்து கொண்டனர் என்று மாநகராட்சி குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

சிசேரியன்:

காலை டிபன்:

அரிசி கஞ்சி, காய்ச்சிய ஆவின் பால் 200 மி.லி.

மதிய சாப்பாடு:

அரிசி சாதம் 200 கிராம், 50 கிராம் பருப்பு டால், 200 கிராம் வெஜிடேபிள் சூப்.

இரவு உணவு:

3 இட்லி (தலா 100 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார் 200 கிராம் மற்றும் 200 மி.லி. காய்ச்சியப் பால். இவை அனைத்தும் சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு 5 நாட்களுக்கு வழங்கப்படும்.

இது தவிர ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீர் 2 லிட்டர் (ஒரு நாளைக்கு) வழங்கப்படும்.

இட்லிக்கு ஐஆர்&20 ரக அரிசி, சாதம் மற்றும் பொங்கலுக்கு பொன்னி அரிசி, பருப்பு, காய்கறிகள், நல்லெண்ணெய் இவை அனைத்தும் முதல் தரத்திலான பொருட்களில் தயாரிக்கப்பட்ட உணவாக வழங்கப்படவுள்ளது.