Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எண்ணெய் கசிவு பிரச்னை நண்டு, நத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு மாநகராட்சி அறிவுரை

Print PDF

தினகரன் 18.08.2010

எண்ணெய் கசிவு பிரச்னை நண்டு, நத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு மாநகராட்சி அறிவுரை

மும்பை, ஆக.18: மீன் பிடிப்பதற்கு மழைக் காலத்தில் விதிக்கப்படும் தடை ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் மீண்டும் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் பிடிக்கப்படும் மீன்களை பொது மக்கள் சாப்பிடலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே சமயத்தில் நண்டு, நத்தை, சிப்பி போன்ற கடற்கரை அருகே கிடைப்பனவற்றை தவிர்க்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

மும்பை துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதியதை அடுத்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல் பகுதி மாசுபட்டது. சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, மும்பை மீன் மார்க் கெட்டுகளில் உள்ள 138 மீன் மாதிரி களை சேகரித்து மாநகராட்சி சோத னைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் எந்தவொரு மாதிரி யிலும் எண்ணை கூறுகள் காணப் படவில்லை. இதையடுத்து மீன்பிடிப்பதற்கான தடையை நீடிப்பதில்லை என மாநில மீன்வளத்துறை முடிவு செய்தது. எனினும் கடற்கரையோரம் மீன் பிடிக் காமல் ஆழமான பகுதிக்கு சென்று மீன் படிக்கும்படி மீன வர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. இது தொடர்பாக மீனவர்களை எச்சரிப்பதற்காக துர்பே, மாகுல், எலி பெண்டா, உரன் ஆகிய இடங்களில் படகுகளையும் மீன்வளத்துறை நிறுத்தி வைத்து இருக்கிறது.

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநில மீனவர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் மேயர் ஸ்ரத்தா ஜாதவை சந்தித்து பேசினர். சங்கத்தின் தலைவர் தாமோதர் தண்டல் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவால் மீன்கள் மாசுபடவில்லை என்பது மாநகராட்சியின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்களை மீன் சாப்பிடும்படி மாநகராட்சி இப்போது வலியுறுத்த வேண்டும்Ó என்றார்.