Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பரிசோதனை ஆய்வகம் துவக்கம்

Print PDF

தினமலர் 20.08.2010

குடிநீர் பரிசோதனை ஆய்வகம் துவக்கம்

முசிறி: முசிறியில், நடந்த குடிநீர் ஆய்வக துவக்க விழாவில் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாதவன் வரவேற்றார்.

யூனியன் ஆணையர்கள் பன்னீர்செல்வம், அனுசுயா முன்னிலை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக மாறன் தலைமை வகித்தார். முசிறி யூனியன் சேர்மன் மனோண்மணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் முசிறி உபகோட்டத்தில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் நிதி உதவியுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வகத்தை துவக்கி வைத்தார்.

குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாதவன் கூறியதாவது: தொட்டியம், முசிறி, தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய ஐந்து யூனியனை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் ஆதாரங்களை தர ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு புதிய ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் குடிநீரின் தரம் பரிசோதனை, நீரில் உள்ள கார, உப்பு தன்மை, நீரின் அமிலத்தன்மை, புளோரைடு, சல்பேட்டு உப்பு அளவு கண்டறிதல் உட்பட பல்வேறு பரிசோதனை செய்து கொள்ளவும், கிராமங்களில் உள்ள குடிநீர் தரத்தை பரிசோதிக்கவும், கைபம்பு மின் விசை மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியானதா என்பது பற்றி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நோய்களை கட்டுப்படுத்தவே குடிநீர் ஆதாரங்களின் தர பரிசோதனை செய்யப்பட மாவட்ட அளவில் மட்டுமே இருந்த ஆய்வகம் தற்போது யூனியன் அளவிலும் செயல்படுத்தும் நோக்கில் முசிறியில் குடிநீர் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.