Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை ஸ்வீட் குடோனுக்கு 2வது முறையாக சீல் வைப்பு

Print PDF

தினகரன் 20.08.2010

நெல்லை ஸ்வீட் குடோனுக்கு 2வது முறையாக சீல் வைப்பு

நெல்லை, ஆக.20: நெல்லை சந்திப்பு பகுதி யில் இயங்கி வரும் ஒரு ஸ்வீட் ஸ்டாலுக் கான கேக் மற்றும் ரொட்டி, தயாரிக்கும் குடோன் கைலாசபுரம் நடுத்தெருவில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியாகும் புகையினால் சுகாதார கேடு, சுவாச கோ ளாறு ஏற்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு சுகா தார சீர்கேட்டை விளைவிக் கும் வகையில் அக் குடோன் இருப்பதாக குழு அறிக்கை யில் தெரிவித்தது. எனவே மாநகராட்சி சுகா தார அதிகாரிகள் குடோ னுக்கு ஜூன் 18ம் தேதி சீல் வைத் தனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன்புஅக்குடோனில் மீண்டும் ஸ்வீட் தயாரிக்கும் பணிகள் நடப்பதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத் தது. அதிகாரி கள் மீண்டும் அங்கு சீல் வைக்க சென்ற போது, குடோன் உரிமையாளர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அம்முயற்சி கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரி கள் முறையான ஆவணங் களை காட்டி, சீல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர் பாக போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பாலம் போலீசார் குடோன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நேற்று பிற்பகலில் மாநகராட்சி உதவி கமிஷனர் சுல்தானா தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று 2வது முறையாக நோட்டீஸ் ஒட்டி சீல் வைத் தனர். போலீஸ் உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு தலைமையில் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மாநகராட்சி ஊழியர்களை ஆபாசமாக திட்டி மிரட்டிய வழக்கில் சுவீட் கடை ஊழியர்களான சிந்தா உசேன் (34), தாகீர் (20), பால்பாண்டி (20), முகம்மதுஅக்பர்ஷா (27), மாரியப்பன் (27), மாரியப்பன் (40), செய்யது (51), இசக்கிமுத்து (32), முகம்மது (26), திப்பு சுல்தான் (21), முகம் மதுஅலி (23) ஆகிய 11 பேரை நெல்லை ஜங்ஷன் போலீசார் கைது செய் தனர்.

நெல்லையில் உள்ள ஸ்வீட் குடோனுக்கு சுகாதார சீர்கேடுகளை காரணம் காட்டி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 2வது முறையாக சீல் வைத்தனர்