Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை.புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளில் தரம் குறைந்த தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 24.08.2010

பாளை.புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளில் தரம் குறைந்த தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருநெல்வேலி : பாளை. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து 600 தரம் குறைந்த தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

சென்னை சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன், இணை இயக்குனர் டாக்டர் சதா சிவம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.

நெல்லையில் மாநகாட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில், உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல் ஹமீது, முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாளை. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் ஆகியவைகளின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது 600 தரம் குறைந்த தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் பழக்கடைகளில் இருந்து அழுகிய பழங்கள் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது.