Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.08.2010

சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

சிவகாசி, ஆக. 24:சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட மினரல் வாட்டர் குடிநீர் பாக்கெட்டுகள், கேன்களை நகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

சிவகாசி நகராட்சி பகுதியில் ஏராளமான மினரல் வாட்டர் கம்பெனிகள் உள்ளன. மினரல் வாட்டர் பாக்கெட் மற்றும் கேன்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனை செய்கின்றனர். பல நிறுவனங்கள் ஐஎஸ்ஐ சான்றிதழை புதுப்பிக்காமல் விற்பனை செய்வதாக நகராட்சி சுகதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன் அடங்கிய சுகாதார குழுவினர் நேற்று நகரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சிவகாசி பஸ்நிலைய பகுதி, பைபாஸ் ரோடு, என்.ஆர்.கே.ஆர். ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, .எஸ்.கே.டி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், மினரல் வாட்டர் ஏஜென்சி நிறுவனங்கள், டீலர்கள் ஆகியோரிடம் சோதனை செய்தனர்.

ஆய்வில் ஐஎஸ்ஐ சான்றிதழ் இல்லாமல், சான்றிதழை புதுப்பிக்காமல் விற்பனை செய்யப்பட்ட 250 மில்லி குடிநீர் பாக்கெட்டுகள் இரண்டு மூடை, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 மினரல் வாட்டர் கேன்கள், 2 லிட்டர் பாட்டில்கள் 12 முதலியனவை பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் (பொறுப்பு) முருகன் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

மேலும் சிவகாசியிலுள்ள ஒரு மினரல் வாட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 15 பாக்கெட் 2 லிட்டர் மினரல் வாட்டர் பாக்கெட்டுகளின் மாதிரிகள் எடுக்கபட்டு சென்னை கிண்டியுள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘மினரல் வாட்டர்களில் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வாங்கிய ஐஎஸ்ஐ தரச்சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காமல் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றனர்.