Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத்துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 25.08.2010

சுகாதாரத்துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு

ராசிபுரம்: அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகுடீஸ்வரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வெங்காடஜலம், பாபு மற்றும் சுகாதார துறையினர், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் மற்றும் குருசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டீ கடை, பேக்கரி, குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். அவை குறிப்பிடப்படாத குடிநீர் பாக்கெட், பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், பொது இடத்தில் புகைபிடித்தவர்களுக்கும், பீடி, சிகரெட் விற்கும் கடைகளில் எச்சரிக்கை பலகை வைக்காதவர்களுக்கும் அபாராதம் விதித்து, 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சத்தியலட்சுமி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஞானசுந்தரம் ஆகியோர் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹரசுப்ரமணி, சுதாதார ஆய்வாளர்கள், உணவு ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத உணவு பாக்கெட்டுகள், தண்ணீர் பாக்கெட், பாட்டில்களை பறிமுதல் செய்து அளித்தனர். பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.