Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாக்கெட் குடிநீரின் தரம் ஆய்வு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

Print PDF

தினமலர் 25.08.2010

பாக்கெட் குடிநீரின் தரம் ஆய்வு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

விழுப்புரம் : தமிழகத்தில் விற்பனையாகும் பாக்கெட் குடிநீரின் தரத்தினை சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம், சுகாதார சீர்கேடு குறித்து ஆய்வு செய்ய சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.இக் கூட்டத்தில் உணவுப் பொருட்கள் கலப்படத்தை தடுத்தல், பாக் கெட் குடிநீர் விற்பனையை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாக் கெட் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற் கொண்டு, குடிநீரின் தரம் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டிருந் தார்.சுகாதாரத் துறையினர், மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வினை மேற் கொண்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் கள் முருகேசன், செபஸ் டின் ஆகியோர் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரத்தில் பாக் கெட் குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் வைகை ஏஜன்சிஸ் (விகேர்), பாலாஜி ஏஜன்சிஸ் (ஜலதரா), விக்னேஷ் ஏஜன்சீஸ் (ட்ரு) விற்பனையகங்களில் ஆய்வு செய்து குடிநீர் மாதிரிகளை சேகரித்தனர்.ஒவ்வொரு நிறுவனத் தின் குடிநீர் மாதிரிகளை (தலா 4 லிட்டர்) எடுத்து அதனை ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு (கிங் இன்ஸ்டிடியூட்) மையத்திற்கு சீல் வைத்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் தரம் குறித்து ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளது.