Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ1.5 கோடி செலவில் மும்பை கடலோரம் சுத்தப்படுத்தப்படுகிறது மாநகராட்சி அதிரடி திட்டம்

Print PDF

தினகரன் 02.09.2010

ரூ1.5 கோடி செலவில் மும்பை கடலோரம் சுத்தப்படுத்தப்படுகிறது மாநகராட்சி அதிரடி திட்டம்

மும்பை, செப். 2: ரூ.1.5 கோடி செலவில் மும்பை கடலோரத்தை சுத்தப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மகாலட்சுமி கோயில் அருகே உள்ள குலிஸ்தான் ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தனர். அதில் மும்பை கடலோரங்கள் அசுத்தமாக இருப்பதாகவும் சுத்தப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடலோரத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ரூ.1.5 கோடி செலவில் மும்பை கடலோரத்தை சுத்தப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹாஜி அலி முதல் ஒர்லி கிராம் வரை 18 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைபோல கொலாபா முதல் தார்டுதேவ் வரை 14 பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் தினமும், அலையின் வேகம் குறைவாக இருக்கும் அதிகாலை வேளையில் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருக்கிறது. 3 லாரிகள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

தினமும் 8 மெட்ரிக் டன் கழிவுகள் இப்பகுதிகளில் இருந்து கிடைக்க கூடும் என மாநகராட்சி திடக்கழிவு நிர்வாக தலைமை பொறியாளர் பி.பி. பாட்டீல் கூறினார்.

தினமும் 8 மெட்ரிக் டன் கழிவுகள் இப்பகுதிகளில் இருந்து கிடைக்க கூடும் என மாநகராட்சி திடக்கழிவு நிர்வாக தலைமை பொறியாளர் பி.பி. பாட்டீல் கூறினார் நுங்கம்பாக்கம், மாம்பலம், நந்தனம் மழைநீர் கால்வாய்கள் ரூ68 கோடியில் சீரமைப்பு

சென்னை, செப்.2: நுங்கம்பாக்கம் கால்வாய், மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய் கொடுங்கையூர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ரூ68 கோடியில் நடக்கிறது. இந்த பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநகராட்சி சார்பில், நுங்கம்பாக்கம் கால்வாய் 900 மீட்டர் நீளத்திற்கும், 9 மீட்டர் அகலத்திற்கும் தூர்வாரி சீரமைக்கும் பணி ரூ4.6 கோடியில் நடக்கிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது:

சென்னையில் அடையாறு, கூவம் உட்பட 22 நீர் வழித்தடங்கள் உள்ளன. பொதுமக்கள் இந்த நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், கொசு உற்பத்திக்கு வழி ஏற்படுகிறது. இதை மாற்றி சிங்காரச் சென்னையை உருவாக்க முதல்வர் கருணாநிதி உத்தரவின்படியும், துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவுரைப்படியும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளுக்காகவும், மழைநீர் வடிகால்வாய்களை சீரமைப்பதற்காகவும் ரூ1,448 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ638 கோடியும், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ811 கோடியும் செலவிடப்படும். பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நுங்கம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், மாம்பலம் & நந்தனம் கால்வாய் ஆகியவை ரூ68.35 கோடியில் 13 ஆயிரத்து 75 மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த கால்வாய்களில் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் சுவர்கள் 8 அடியில் அமைக்கப்பட்டு, அதன் மீது 4 அடி கம்பி வேலி அமைக்கப்படும். கால்வாயில் தண்ணீர் வேகமாக செல்வதற்காக கான்கிரீட் தரை தளம் அமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். மழைநீர் தேக்காமல் செல்வதற்கான பாதை சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள் படிப்படியாக 2 ஆண்டுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

2 ஆண்டில் பணி முடியும் 326 கி.மீ நீளத்திற்கு மழைநீர் கால்வாய் "புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதி, கொளத்தூர் நீர்ப்பிடிப்பு பகுதி, வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய்நீர்ப்பிடிப்பு பகுதி, தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, ராயபுரம் நீர்ப்பிடிப்பு பகுதி, கூவம் நீர்ப்பிடிப்பு பகுதி, கேப்டன் காட்டன் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி ஆகிய 9 பகுதிகளில் 326.36 கி.மீ. நீளத்திற்கு ரூ527.91 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளும் படிப்படியாக 2 ஆண்டிற்குள் முடிக்கப்படும்" என்றார் மேயர்.