Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் பன்றிக் காய்ச்சல் கண்டறிய மருத்துவக் குழுக்கள்

Print PDF

தினமலர் 14.09.2010

மாநகராட்சி பகுதியில் பன்றிக் காய்ச்சல் கண்டறிய மருத்துவக் குழுக்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் பன்றிக் காய்ச்சலை கண்டறிய, தனி மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது: அதிக காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால், அது பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம். உடனே, அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப் பட்டோர் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இக்குழுக்கள், பள்ளிகளுக்கு சென்று பரிசோதிக்கின்றனர். பொது சுகாதார பிரிவில் பணிபுரிவோருக்கு தடுப்பூசி போடப்பட்டு, அதனால் பின் விளைவு இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடனுக்குடன் கையை கழுவுதல், சுத்தமான குடிநீரை பருகுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு கமிஷனர் கூறியுள்ளார்.