Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார மேம்பாடு திட்டம் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 16.09.2010

சுகாதார மேம்பாடு திட்டம் செயல்படுத்த முடிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மற்றும் இணைய உள்ள பகுதிகளை சேர்த்து சுகாதார மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தை மாதிரி திட்டமாக தயாரித்து, குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் செயல்படுத்தப்படும். அதில் ஏற் படும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்த்த பின், முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் புனே சென்று பயிற்சி பெற்றுள் ளனர். அங்கு பயிற்சி தந்த பிரதிநிதிகள், திருப்பூருக்கு நேரில் வர உள்ளனர். அப்போது, திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதியை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்க உள்ளனர். தற்போது 52 வார்டுகளுடன் மட்டுமே உள்ள திருப்பூர் மாநகராட்சியுடன், வரும் 2011ல் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சி, செட்டி பாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளை யம், நெருப்பெரிச்சல், முத்தணம்பாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் இணைய உள்ளன.

திருமுருகன்பூண்டி பேரூராட்சியையும் திருப் பூருடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், மாநகராட்சியின் பரப்பளவு இன் னும் அதிகரிக்கும். மாநகராட்சியில் தற்போது தினமும் 450 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஒருங்கிணைக்கப்படும் மாநகராட்சியில், 800 டன்களுக்கு மேல் குப்பை சேகரிக்கப்படும்; கால்வாய் சுத்திகரிப்பு பணியும் அதிகமாகும். புனேவில் வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப் படையில், மாநகராட்சி அதிகாரிகள் திட்ட அறிக்கை தயாரித்து கமிஷனரிடம் சமர்ப்பித்துள் ளனர். நிறைவேற்ற சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து பரிசீலனையும் செய்து வருகின்றனர்.

கமிஷனர் ஜெயலட்சுமி கூறுகையில், ""திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தற்போதுள்ள உள் கட்டமைப்பு வசதி; இணைக்கப்படும் மற்ற நகர பகுதிகளில் உள்ள சுகாதார மேம்பாட்டு வசதி; கழிவு அகற்றும் விதம், குப்பை சேகரிப்படும் விதம் என பல அம்சங்களும் பரி சீலிக்கப்படுகின்றன. திருப்பூருடன் இணைக் கப்படும் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகிறது. இதில் செயல்படுத்த சாத்தியமுள்ள திட்டங் கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப் படும். நல்ல திட்டத்தை, மாதிரி திட்டமாக வடிவமைத்து, குறிப்பிட்ட சிறிய பகுதியில் நடைமுறைப்படுத்தி பார்க்க வேண்டும்; அதில் உள்ள சாதக, பாதக விஷயங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மாற்றம் செய்து, சுகாதார மேம் பாட்டு திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.